Deva Kirubai Endrum Ullathu : Lyrics - Christking - Lyrics

Deva Kirubai Endrum Ullathu : Lyrics


Lyrics : Deva Kirubai Endrum Ullathu

தேவ கிருபை என்றுமுள்ளது
அவர் கிருபை என்றுமுள்ளது

அவரைப் போற்றித் துதித்துப்பாடி
இல்லேலூயா என்றார்ப்பரிப்போம்

1. நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மை காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்அவர்
கிருபை என்றுமுள்ளதே

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன் சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்அவர்
கிருபை என்றுமுள்ளது

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது

5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளது

6. நித்திய தேவனாம் சத்திய பரன்தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது

Songs Description :
Song : Deva Kirubai Endrum Ullathu
Artist :
Album :
Keywords : Tamil Christian Songs Lyrics
Deva Kirubai Endrum Ullathu : Lyrics Deva Kirubai Endrum Ullathu : Lyrics Reviewed by Christking on December 06, 2016 Rating: 5
Powered by Blogger.