Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று - Christking - Lyrics

Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று

என்னை யாரென்று [E min T100 4/4]
என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்

Ennai yaarendru enakke indru
Adaiyaalam kaatineer
Verum mann yendru udhirum pullendru
Enakke ninaivoottineer

என்னால் முடியும் என்று நினைத்தேன் - எனக்கு
எல்லாம் தெரியும் என்று நடந்தேன் - ஆனால்
வழியிலே தவறி விழுந்தேன் - நல்ல
வழியையும் தவறி அலைந்தேன் - நான்
தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்

Ennaal mudiyum endru ninaithen - enakku
Ellaam theriyum endru nadandhen - aanaal
Vazhiyile thavari vizhundhen - nalla
Vazhiyaiyum thavari alaindhen - naan
Tholaindhen enbadhai unarndhen

நானாய் நடந்த சில வழிகள் - இன்று
வீணாய் மனதிற்குள்ளே வலிகள் - எந்தன்
சுயத்தினால் கிடைத்த சிறைகள் - எந்தன்
அகத்தினுள் படிந்த கறைகள் - இல்லை
நிறைகள் முற்றிலும் குறைகள்

Naanaai nadandha sila vazhigal - indru
Veenaai manadhirkulle valigal - endhan
Suyathinaal kidaitha siraigal - endhan
Agathinul padindha karaigal - Yedhu
Niraigal mutrilum kuraigal

வேண்டாம் இனி எனது விருப்பம் - ஐயா
உந்தன் வழியில் என்னை நடத்தும் - இன்றே
எந்தன் சுயமதனை அகற்றும் - அன்று
எந்தன் ஜீவியமது சிறக்கும் - புத்தி
பொருத்தும் முற்றிலும் திருத்தும்

Vendaam ini enadhu viruppam - aiyaa
Undhan vazhiyil ennai nadathum - indre
Endhan suyamadhanai agatrum - andru
Endhan jeeviyamadhu sirakkum - buthi
Poruthum mutrilum thiruthum
Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று Ennai yaarendru enakke indru - என்னை யாரென்று எனக்கே இன்று Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.