En Sitham Alla Um - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா

Album : | Artist :

என் சித்தமல்ல உம் சித்தம் நாதா
என்னாலேயல்ல உம்மாலே ஆகும்

அடிமை நானே எஜமானன் நீரே நாதா
பெலவீனன் நானே பெலவான் நீரே நாதா

காலையில் தோன்றி மாலையில்
மறைபவன் நாதா-மலர் போல் பூத்து
நிழல் போல் மறைபவன் நாதா

களிமண் நானே குயவன் நீரே நாதா
மண்ணான மனிதன் நான்
மண்ணுக்கே திரும்புவேன் நாதா

பாதகன் என்மேல் பாசம் கொண்டீரே நாதா
பாரெல்லாம் உம் புகழ் பாடி மகிழ்வேன் நாதா

உம் திருஇரத்தத்தால் மீட்டுக்
கொண்டீரே நாதா-உம் செல்லப்
பிள்ளையாய் சொந்தமானேன் நாதா

En Sitham Alla Um - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா En Sitham Alla Um - என் சித்தமல்ல உம் சித்தம் நாதா Reviewed by Christ King on 16:09:00 Rating: 5
Powered by Blogger.