Yesuvin Kaigal Kaka / இயேசுவின் கைகள் காக்க - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Yesuvin Kaigal Kaka / இயேசுவின் கைகள் காக்க - Tamil Christian Songs Lyrics


    1. இயேசுவின் கைகள் காக்க,
    மார்பினில் சாருவேன்;
    பேரன்பின் நிழல் சூழ
    அமர்ந்து சுகிப்பேன்.
    பளிங்குக் கடல் மீதும்
    மாட்சி நகர்நின்றும்
    தூதரின் இன்ப கீதம்
    பூரிப்புண்டாக்கிவிடும்.

    2. இயேசுவின் கைகள் காக்க,
    பாழ்லோகின் கவலை
    சோதனை பாவக் கேடும்
    தாக்காது உள்ளத்தை;
    கஷ்டம் துக்கம் கண்ணீரும்
    காணாமல் நீங்குமே;
    வதைக்கும் துன்பம் நோவும்
    விரைவில் தீருமே.

    3. இயேசு என் இன்பக் கோட்டை;
    எனக்காய் மாண்டோரை
    சார்ந்தென்றும் நிற்பேன், நீரே
    நித்திய கன்மலை.
    காத்திருப்பேன் அமர்ந்து
    ராக்காலம் நீங்கிட,
    பேரின்ப கரை சேர
    மா ஜோதி தோன்றிட.
    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Yesuvin Kaigal Kaka / இயேசுவின் கைகள் காக்க - Tamil Christian Songs Lyrics Yesuvin Kaigal Kaka / இயேசுவின் கைகள் காக்க - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 24, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.