Yaar Pirikka Mudiyum Naathaa - யார் பிரிக்க முடியும் நாதா : Lyrics

யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
2. தெரிந்து கொண்ட உம் மகன்(கள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Yaar Pirikka Mudiyum Naathaa - யார் பிரிக்க முடியும் நாதா : Lyrics
Reviewed by Christking
on
April 26, 2016
Rating:

No comments: