Magilchiyodu Thuthikkindrom : Lyrics - Christking - Lyrics

Magilchiyodu Thuthikkindrom : Lyrics

Magilchiyodu Thuthikkindrom

மகிழ்ச்சியோடு துதிக்கின்றோம்
மனம் மகிழ்ந்து துதிக்கிறோம்
மன்னவரே இயேசு ராஜா!
எங்க மனதில் பூத்து மனம் வீசும் ரோஜா
இயேசு ராஜா, சாரோன் ரோஜா!

1. நாற்றமாக இருந்த வாழ்வை
வாசமாக மாற்றினாரே (2)
பாவியாக இருந்த என்னை
பரிசுத்தனாய் (மாய்) மாற்றினீரே (2)
நல்லவரே… வல்லவரே… வாழவைக்கும் அன்பு
தெய்வம் நீரே
எங்களை வாழவைக்கும் அன்பு தெய்வம் நீரே – மகிழ்ச்சி

2. நெருக்கத்திலே இருந்த என்னை
விசாலத்தில் வைத்தீரே
சேற்றின் நின்று தூக்கியெடுத்து
கன்மலைமேல் நிறுத்தினீரே
அற்புதரே அதிசயமே ஆனந்தமே பரம ஆனந்தமே
இயேசு ஆனந்தமே பரம ஆனந்தமே – மகிழ்ச்சி

3. அடுப்புக்கரி போலிருந்தேன்
பொன் சிறகாய் மாற்றினீரே
திரு இரத்தத்தாலே கழுவி என்னை
சுத்தமாக ஆக்கினீரே
உன்னதமானவரே… உயர்ந்தவரே… இருள்
நீக்கும் ஒளிவிளக்கே
உள்ளத்தின் இருள் நீக்கும் ஒளிவிளக்கே – மகிழ்ச்சி

4. தாயைப்போல் என்னை அவர்
சேர்த்தணைத்துக் கொண்டாரே
நல்ல தந்தை போல என்னை அவர்
தோளில் தூக்கிச் சுமந்தாரே
அப்பா அல்லோ! நல்ல அப்பா அல்லோ!
பிள்ளை அல்லோ! செல்லப்பிள்ளை அல்லோ! – மகிழ்ச்சி

Worship Songs Lyrics,
Magilchiyodu Thuthikkindrom : Lyrics Magilchiyodu Thuthikkindrom : Lyrics Reviewed by Christking on July 07, 2016 Rating: 5
Powered by Blogger.