Thuthi Paliyai Seluththa : Lyrics - Christking - Lyrics

    Thuthi Paliyai Seluththa : Lyrics

    துதிபலியை செலுத்த
    வந்தோம் இயேசையா
    உம்மை ஆராதிக்க
    கூடி வந்தோம் இயேசையா

    நீர் உயர்ந்தவர் நீர் வல்லவர்
    இந்த உலகை ஆளும் தெய்வம் நீரே

    என்னிலே ஒன்றுமில்லை
    ஆனாலும் நேசித்தீரே
    என்னிலே நன்மையில்லை
    ஆனாலும் உயர்த்தினீரே
    தகப்பனை போல என்னைச் சுமந்தீரையா
    ஒரு தாயை போல என்னை தேற்றினீரே
    சுமந்தீரையா தேற்றினீரே
    ஆராதனை உமக்கே ஐயா எங்கள்
    ஆராதனை ஆராதனை
    எங்கள் ஆராதனை ஆராதனை ஆராதனை
    ஆராதனை உமக்கே ஐயா

    பிறந்த நாள் முதலாய் தூக்கி எறியப்பட்டேன்
    ஒரு கண்ணும் என்மேலே
    இரக்கமாய் இருந்ததில்லை
    பிழைத்திரு என்று என்னை தூக்கினீரே
    உம் மகனாகவே
    என்னை ஏற்றுக்கொண்டீர்
    பிழைக்க செய்தீர் ஏற்றுக்கொண்டீர்
    ஆராதனை உமக்கே ஐயா

    உமது இரக்கத்திற்கு
    முடிவே இல்லையாப்பா
    உமது அன்பிற்கு அளவே இல்லையப்பா
    உமது காருண்யம் என்னை பெரியவனாய்
    உயரத்திலே நிறுத்தியதே

    Songs Description :
    Song : Thuthi Paliyai Seluththa
    Artist : Lukas Sekar
    Album :
    Keywords : Tamil Christian Songs Lyrics
    Thuthi Paliyai Seluththa : Lyrics Thuthi Paliyai Seluththa : Lyrics Reviewed by Christking on August 31, 2016 Rating: 5
    Powered by Blogger.