அந்த அழுகுரல்! - Christking - Lyrics

அந்த அழுகுரல்!


மாபெரும் தத்துவ ஞானியாகிய சாக்ரட்டீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டபோது, தன் மரணத்தை சந்திக்கும்படி, ஒரு வீரனைப் போல், சென்று கொண்டிருந்தார். அவருக்குக் கொடுக்கப்பட்ட மரண தண்டனை விஷம் நிறைந்த பானத்தைப் பருகி, சாக வேண்டும் என்பதே! அவர் செல்லும் வழியில் அவரது மனைவி குறுக்கே வந்து ஓலமிட்டு, கூப்பாடு போட்டு, தலைவிரி கோலமாய் அழுதுகொண்டு ஓடி வந்தாள். அவள் புலம்பலின் சத்தம் அவரது உள்ளத்தை உடைத்தது. கலங்கப் பண்ணினது.

“ஐயோ, என் உயிருக்கு உயிரான மனைவியின் அழுகுரல் உறுதி நிறைந்த என் உள்ளத்தை வருத்துகிறதே! அவளை அப்புறப்படுத்துங்கள். அவளை அப்புறப்படுத்துங்கள்” என்று கூறிக்கொண்டே விஷத்தை அருந்தினார்.

இயேசுகிறிஸ்துவின் உள்ளமும் அவரது தாயாரான மரியாளின் கண்ணீரால் உடைக்கப்பட்டு, சுக்குநூறாய் நொறுங்கியிருந்திருக்கும்! பாலூட்டிச் சீராட்டி வளர்த்த தாயல்லவா? அவளை அப்புறப்படுத்துங்கள் என்று அவர் கூச்சலிடாமல், தன் கடமையை எவ்வளவு நிதானத்தோடும், சுய நினைவோடும், கரிசனையோடும் நிறைவேற்றி, தன் அருமை சீஷனாகிய @யாவானிடம் மரியாளை ஒப்புவித்தார்!

Tamil Christian Stories,
அந்த அழுகுரல்! அந்த அழுகுரல்! Reviewed by Christking on August 10, 2017 Rating: 5
Powered by Blogger.