சிலுவையை எடுத்துக் கொண்டு! - Christking - Lyrics

சிலுவையை எடுத்துக் கொண்டு!


“சீஷத்துவம் என்றால் என்ன?” ஒரு தரிசனத்தில் பக்தன் ஒரு பெரிய அறையை நோக்கிச் சென்றான். அந்த அறைக்குள்ளே பெரியதும் சிறிதுமான நிறைய சிலுவைகள் அடுக்கப்பட்டிருந்தன. ஒரு தேவதூதன் வரவேற்று, அவனுடைய முதுகிலே மரத்திலான ஒரு சிலுவையை வைத்தான்.

அவனுடைய கண்கள், மெதுவாக அறைக்குள் இருந்த மற்ற சிலுவைகளை நோட்டமிட்டன. அங்கே ரோஜா செடியினாலும், மலர்களி னாலும் செய்யப்பட்ட சிலுவையைக் கண்டது. அவன் தேவதூதனைப் பார்த்து, “ஐயா, எனக்கு ரோஜா மலர்களான மரச்சிலுவையைத் தாருங்கள்” என்றான். சரி, என்று தேவதூதன் அந்த மரச்சிலுவையை அவன் முதுகிலிருந்து எடுத்துவிட்டு, ரோஜா மலர் சிலுவையை வைத்தான்.

ஆனால் கொஞ்சதூரத்திற்குள் அந்த சிலுவையிலுள்ள ரோஜா மலர்கள் எல்லாம் வாடி, வதங்கிக் கொட்டிப்போனது. ரோஜாவின் முட்கள் அவனுடைய முதுகெல்லாம் குத்தி, கிழித்து, புண்ணாக்கியது. துயரத்தோடு அவன் திரும்பி வந்தான்.

“ஐயா, அழகு என்று நம்பி, முதுகு எல்லாம் இரத்தம் வழிகிற நிலைமைக்கு வந்தேன். இது எனக்கு வேண்டாம். அந்த அறைக்குள்ளே தங்கநிறமான பெரிய சிலுவை இருக்கிறதே. அதைக் கொடுங்கள்” என்றான்.

தங்க சிலுவையின் சுமையோ தாங்க முடியாததாய் இருந்தது. கொஞ்ச தூரம் நடப்பதற்குள்ளாக ஆழமான சகதிக்குள்ளே அவனுடைய கால் புதையுண்டது. சிலுவையின் பாரம் அவனை அழுத்தினது. அதைத் தாண்டி அவனால் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

“ஐயா, பொற்சிலுவை மிகவும் மதிப்புள்ளது. அதை சுமந்து மக்களு டைய மதிப்பையும், பாராட்டுதலையும் பெறலாம் என்று எண்ணினேன். அந்தோ! அந்த பாரத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆக@வ தயவு செய்து பழைய மரச்சிலுவையே எனக்குக் கொடுத்து விடுங்கள்” என்றான்.

சிலர் அழகை நாடுகிறார்கள். சிலர் பொன், வெள்ளியை நாடுகிறார் கள். “நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையும் குறித்து மேன்மைப்பாராட்டாதிருப்பேனாக” (கலா. 6:14).

சிலுவையை எடுத்துக் கொண்டு! சிலுவையை எடுத்துக் கொண்டு! Reviewed by Christking on August 05, 2017 Rating: 5
Powered by Blogger.