Aandavarai Ekkaalamum

Album : | Artist :
ஆண்டவரை எக்காலமும் போற்றிடுவேன்
அவர் புகழ் எப்போதும் என் நாவில் ஒலிக்கும்
என்னோடே ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்
ஒருமித்து அவர் நாமம் உயர்த்திடுவோம்
நடனமாடி நன்றி சொல்வோம்...
ஆண்டவரைத் தேடினேன் செவி கொடுத்தார்
எல்லாவித பயத்தினின்றும் விடுவித்தார்
அவரை நோக்கிப் பார்த்ததால் பிரகாசமானேன்
எனது முகம் வெட்கப்பட்டுப் போகவேயில்ல
பிள்ளை நான் கூப்பிட்டேன் பதில் தந்தாரே
நெருக்கடிகள் அனைத்தினின்றும் விடுவித்தாரே
கர்த்தர் நல்லவர் சுவைத்துப் பாருங்கள்
அவரை நம்பும் மனிதரெல்லாம் பாக்கியவான்கள்
சிங்கக் குட்டி உணவின்றி பட்டினி கிடக்கும்
ஆண்டவரை நாடுவோர்க்கு குறைவேயில்லை
Aandavarai Ekkaalamum
Reviewed by Christking
on
January 21, 2018
Rating:
