Mannuyire Kaakath Thannuyir - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் - Christking - Lyrics

Mannuyire Kaakath Thannuyir - மன்னுயிர்க்காகத் தன்னுயிர்

மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் வந்தார்

இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
ஏகபராபரன் வந்தார் வந்தார்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர்
மகிமைப் பராபரன் வந்தார் வந்தார்

நித்திய பிதாவின் நேய குமாரள்
நேமி அனைத்தும் வாழ வந்தார் வந்தார்

மெய்யான தேவன் மெய்யான மனுடன்
மேசியா ஏசையா வந்தார் வந்தார்

தீவினை நாசர் பாவிகள் நேசர்
தேவ கிறிஸ்தையா வந்தார் வந்தார்

ஜெய அனுகூலர் திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் வந்தார்
Mannuyire Kaakath Thannuyir - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் Mannuyire Kaakath Thannuyir - மன்னுயிர்க்காகத் தன்னுயிர் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.