Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை ஆண்டவரே - Christking - Lyrics

Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை ஆண்டவரே

நான் நல்லவன் இல்லை ஆண்டவரே
என்னில் நன்மை இல்லை பெரியாவரே
நான் நல்லவள் இல்லை ஆண்டவரே
என்னில் நன்மை இல்லை பெரியாவரே

விழுந்து போன பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
விலகாமல் காத்தீரையா - என்னை
ஒதுக்கப்பட்ட பாத்திரமாய் நான் வாழ்ந்துமே
ஓயாமல் நேசித்தீரையா

தீட்டுப்பட்ட என் வாழ்வை நீர் பார்த்துமே
என்னை தீமையாய் நிலைக்கவில்லையே
அசுத்தமான என் உள்ளம் நீர் மாற்றவே
பரிசுத்தாவி தந்தீரையா

உலகத்தை நேசித்து நான் வாழ்ந்தேனே
நேசிக்க யாருமில்லையே - என்னை
உடைக்கப்பட்டு உணர்ந்து நானும் திரும்பி பார்க்கையில்
கண்ணீரோடு காத்திருந்தீரே - எனக்காய்

நான் நல்லவன் இல்லை என்றாலும் இயேசுவே
என்னை நேசிக்கும் நீர்தானே பெரியாவரே
என்னில் நன்மை இல்லை என்றாலும் இயேசுவே
என்னை நேசிக்கும் நீர்தானே சிறந்தவரே
Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை ஆண்டவரே Naan Nallavan Illai - நான் நல்லவன் இல்லை ஆண்டவரே Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.