Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை - Christking - Lyrics

    Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

    நான் உன்னை விட்டு விலகுவதில்லை
    நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை
    நான் உன்னைக் காண்கின்ற தேவன்
    கண்மணி போல் உன்னைக் காப்பேன்

    பயப்படாதே நீ மனமே - நான்
    காத்திடுவேன் உன்னை தினமே
    அற்புதங்கள் நான் செய்திடுவேன்
    உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்

    திகையாதே கலங்காதே மனமே - நான்
    உன்னுடனிருக்க பயமேன்
    கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் - உன்
    கவலைகள் யாவையும் போக்கிடுவேன்

    அனுதினம் என்னைத் தேடிடுவாய் - நான்
    அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
    அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
    ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்

    நீதியின் வலக்கரத்தாலே உன்னை
    தாங்குவேன் நான் அன்பினாலே
    ஆவியில் உண்மையாய் ஜெபித்திடுவாய்
    தினம் அல்லேலூயா என்றே ஆர்ப்பரிப்பாய்
    Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Naan Unnai Vittu Vilaguvathillai - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.