Naanum En Veetarum - நானும் என் வீட்டாரும் - Christking - Lyrics

    Naanum En Veetarum - நானும் என் வீட்டாரும்

    நானும் என் வீட்டாரும்
    உம்மையே நேசிப்போம்
    உமக்காய் ஓடுவோம்
    உந்தன் நாமம் சொல்லுவோம்

    கைவிடா தெய்வம் கருணையின் சிகரமே
    மெய்யான தீபமே என் வாழ்வின் பாக்கியமே

    முழந்தாழ் படியிட்டு
    முழுவதும் தருகிறேன்-நான்

    எபிநேசர் எபிநேசர் இதுவரை உதவினீரே
    யெகோவா ஈரே எல்லாம் பார்த்துக் கொள்வீர்

    யெகோவா ஷம்மா கூடவே இருக்கின்றீர்
    யெகோவா ஷாலோம் சமாதானம் தருகிறீர்

    பரிசுத்தர் பரிசுத்தர் பரலோக ராஜாவே
    எப்போதும் இருப்பவரே இனிமேலும் வருபவரே
    Naanum En Veetarum - நானும் என் வீட்டாரும் Naanum En Veetarum - நானும் என் வீட்டாரும் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.