Nandri Solli Paduvean - நன்றி சொல்லி பாடுவேன் - Christking - Lyrics

Nandri Solli Paduvean - நன்றி சொல்லி பாடுவேன்

நன்றி சொல்லி பாடுவேன்
நாதன் இயேசுவின் நாமத்தையே
நன்றியால் என் உள்ளம் நிறைந்தே
நாதன் இயேசுவைப் போற்றிடுவேன்

நல்லவரே வல்லவரே
நன்மைகள் என் வாழ்வில் செய்பவரே

கடந்த நாட்கள் முழுவதும் என்னை
கண்ணின் மணி போல் காத்தாரே
கரத்தைப் பிடித்துக் கைவிடாமல்
கனிவாய் என்னை நடத்தினாரே

எரிகோ போன்ற எதிர்ப்புகள் எனக்கு
எதிராய் வந்து எழும்பினாலும்
சேனையின் கர்த்தர் என் முன்னே
செல்கிறார் என்று பயப்படேனே

துன்பங்கள் எந்தன் வாழ்வினிலே
சூழ்ந்து என்னை நெருக்கினாலும்
கன்மலை தேவன் என்னோடு இருக்க
கவலையில்லை என் வாழ்விலே

மேகங்கள் மீது மன்னவன் இயேசு
வேகம் வருவார் ஆனந்தமே
கண்ணீர் துடைந்து பலனைக் கொடுக்க
கர்த்தாதி கர்த்தர் வருகின்றாரே
Nandri Solli Paduvean - நன்றி சொல்லி பாடுவேன் Nandri Solli Paduvean - நன்றி சொல்லி பாடுவேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.