Neer Seitha Nanmaikal - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் - Christking - Lyrics

Neer Seitha Nanmaikal - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்

நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன்
கருத்தோடு நன்றி சொல்கிறேன்

என் தாயின் கருவிலே நான் உருவான
நாள்முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
என் நாசியாலே நான் சுவாசித்த நாள்முதல்
நாள்தோறும் காத்து வந்தீரே

நன்றி நன்றி பலி செலுத்தியே
நாதன் இயேசுவையே பாடுவேன்
கோடி நன்றி பலி செலுத்தியே
ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

பாவியாக நான் வாழ்ந்து
பாவம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே
நான் உம்மை விட்டு தூரம் சென்று
துரோகம் செய்த நாட்களிலும்
நாள்தோறும் காத்து வந்தீரே

நான் திக்கற்று துணையின்றி
திகைத்திட்ட நேரத்தில்
துணையாக தேடி வந்தீரே
நான் துக்கத்தால் மனம் நொந்து
மடிகின்ற நேரத்தில் - உம்
மகன் என்னை தேடி வந்தீரே

நான் மனதார நேசித்த
மனிதர்கள் மறந்தாலும்
மறவாத நேசர் நீர் ஐயா
என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
மாறிட உம் கிருபையாலே
நாள்தோறும் தாங்கினீரையா
Neer Seitha Nanmaikal - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Neer Seitha Nanmaikal - நீர் செய்த நன்மைகளை நினைக்கின்றேன் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.