Neerae Vazhi Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம் - Christking - Lyrics

Neerae Vazhi Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம்

நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்- வேறே
ஒரு தெய்வம் இல்லை நீரே தேவன்
விண்ணிலும் மண்ணிலும் மெய்
நாமம் உந்தன் நாமம் ஐயா
உமக்கு நிகர் என்றும் நீர் தானைய்யா

கல்லும் அல்ல மண்ணும் அல்ல கல்லான
ஓர் சிற்பமல்ல ஜீவனுள்ள தேவன்
என்றால் நீர் தானைய்யா-ரூபமும்
உமக்கில்லை சொருபமும் உமக்கில்லை
ஆவியாய் இருக்கிறீர் ஆண்டவரே

உண்டானது எல்லாமே உம்மாலே
உண்டானது உம் நாம மகிமைக்கே
உண்டாக்கினீர்- படைப்பு தெய்வமல்ல
பார்ப்பதெல்லாம் தெய்வமல்ல
கர்த்தர் நீர் ஒருவரே கடவுளய்யா

எல்லாம் வல்ல தெய்வம் நீரே
எல்லையில்லாதவரே
உம்மாலே ஆகாதது ஒன்றுமில்லையே
வானம் உம் சிங்காசனம் பூமி உந்தன் பாதபடி
நடப்பதெல்லாம் உம் விருப்பப்படி
Neerae Vazhi Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம் Neerae Vazhi Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.