Um Samugame En - உம் சமூகமே என் பாக்கியமே - Christking - Lyrics

    Um Samugame En - உம் சமூகமே என் பாக்கியமே

    உம் சமூகமே என் பாக்கியமே
    ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
    உம் குரல் கேட்க
    இராஜா இயேசு இராஜா

    ஒரு கோடி செல்வங்கள் எனைத்
    தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
    செல்வமே ஒப்பற்ற செல்வமே
    நல் உறவே நாளெல்லாம் உம் நினைவே

    என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
    என்னே உம் அன்பு
    தென்றலே கல்வாரி தென்றலே
    அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
    ஆளுகை செய்யும்

    எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
    எல்லாமே மாயை ஐயா
    தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
    உம் நதியில் ஒவ்வொரு நாளும்
    மூழ்கணுமே
    Um Samugame En - உம் சமூகமே என் பாக்கியமே Um Samugame En - உம் சமூகமே என் பாக்கியமே Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.