Unakku Virothamai - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் - Christking - Lyrics

    Unakku Virothamai - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

    உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
    வாய்க்காதே வாய்க்காதே
    ஒரு வழியாய் வருவான்
    எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
    வெட்கப்பட்டு போவதில்லையே - நீ

    எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
    கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
    துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
    கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

    ராஜா இயேசு நம்ம பக்கமே
    அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
    வெற்றி - 5,
    வெற்றியே - 2

    எதிர்த்து வரும் எரிகோவை
    தகர்த்தெறியும் வல்லமை
    தடுத்து நிற்கும் சாத்தானை
    முறித்தெரியும் வல்லமை
    அக்கினியில் நடந்தாலும்
    எரிந்திடாத வல்லமை
    தண்ணீரிலே நடந்தாலும்
    மூழ்கிடாத வல்லமை
    Unakku Virothamai - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Unakku Virothamai - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.