நினைவுகள் எப்படி? | How Are the Thoughts? - Christking - Lyrics

நினைவுகள் எப்படி? | How Are the Thoughts?



"அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்" (நீதி. 23:7).

ஒரு மனிதனுடைய வாழ்க்கை, அவனுடைய சிந்தனைகளையும், எண்ணங்களையும், நினைவுகளையும் பற்றியே உருவாகிறது. ஒருவன் எப்படிப்பட்டவனாய் உருவாக்கப்படுகிறான்? வேதம் சொல்லுகிறது, "அவன் இருதயத்தின் நினைவின்படியே அவன் உருவாக்கப்படுகிறான்."

இன்று உலகத்தில் பல கோடி மக்கள் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதத்தில் இருக்கிறார்கள். ஒரே பெற்றோருக்கு பிள்ளைகளாயிருக்கும் நான்கு பேருமே நான்கு விதமான நிலைமையில் ஜீவிக்கிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வுக்குக் காரணம், அவர்களுடைய சிந்தனைகளும், நினைவுகளும் வேறுபட்டிருப்பதுதான். இன்றைக்குப் பலர் தங்களுடைய எண்ணங்களைக் குறித்து அக்கறை கொள்ளாமல் வாழுகிறார்கள்.

ஒருவர் தன்னுடைய அலுவலகத்திலே ஒரு உயர்ந்த பதவியைப் பெற குறுக்கு வழியை நாடினார். "ஒருவேளை நான் மேலே ஏற முயலும்போது ஒரு சிலரை மிதிக்க வேண்டியது இருக்கலாம். அதைப் பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. வேறு ஒருவர் அந்தப் பதவியில் இருப்பதைவிட நானே அந்த இடத்தில் இருப்பது எவ்வளவு நல்லது" என்று ஆசை கொண்டார்.

தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காகப் மந்திரவாதிகளை அணுகினார். உயர் மட்டத்திலிருக்கிறவர்களைக் கீழே இறக்கும்படி செய்வினைகளை செய்தார். அந்தோ பரிதாபம்! அவர் எடுத்த முயற்சிகளெல்லாம் தோல்வியில் முடியவே அவர் பைத்தியக்காரனைப் போலானார். இருந்த வேலையும் பறிபோய்விட்டது.

வேதம் சொல்லுகிறது: "தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு" (நீதி. 14:22). எந்த ஒரு கிறிஸ்தவனின் எண்ணத்திலும் தவறான நோக்கங்கள், தவறான சிந்தனைகள், தீய நினைவுகள் எட்டிப் பார்க்கக்கூடாது. இந்த தீய நினைவுகள், உங்களுடைய ஆத்தும பெலத்தைக் களவாடும்படி முயற்சி செய்கின்றன. அவைகள் உங்கள் மேல் ஆளுகை செய்யவிடாதபடி தடுக்க வேண்டியது உங்களுடைய கடமை. அப். பவுல் எழுதுகிறார், "எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம்" (2 கொரி.10:5).

உங்களுடைய உள்ளத்தில் வேத வசனங்களை விதைத்து, வாக்குத்தத்த வசனங்களைத் தியானியுங்கள். கல்வாரி அன்பைக் குறித்து அடிக்கடி எண்ணி தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். அப்பொழுது தீமையை இலகுவாக மேற்கொள்ளலாம்.

முதலில் பாவம் எப்படி வந்தது? ஏவாள் விலக்கப்பட்ட கனியை புசிப்பதற்கு முன்பாக அதைக் குறித்து சிந்திக்க ஆரம்பித்தாள். அந்த விருட்சம் புசிப்பதற்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறதென்று கண்டாள் (ஆதி.3:6). முடிவிலே பறித்து புசித்தாள். எண்ணத்திலேயே அதைத் தடுத்து நிறுத்தியிருந்தால் இத்தனை பெரிய வீழ்ச்சி வந்திருக்காது. வேதம் சொல்லுகிறது, "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோமர் 8:6).

நினைவிற்கு:- "ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும்" (நீதி.21:5).


“For as he thinks in his heart, so is he” (Proverbs 23:7).

A man’s life forms based on his thoughts and ideas. How a man’s characteristics are determined? The Scripture says that he is being formed based on the thoughts of his heart.

Though there are several crores of people in the world, each one is unique. Four children of same parents lead their lives at different levels. The reason for this disparity is that each has different thoughts and different ideas. Today, many people live without showing proper care of their thoughts.

One person resorted to a short-cut to get a promotion. “I may have to stamp down some people on the way while I try to climb. I am not going to care about that. He was filled with the desire and said, “How good it is for me to sit in that high position than allowing someone else to sit there?”

To fulfil his thoughts, he approached a sorcerer. He involved in witchcrafts to pull down those who were at the top. But alas! All his efforts ended in defeats and at last he lost his mental balance and lost even the job he had.

The Scripture says, “Do they not go astray who devise evil? But mercy and truth belong to those who devise good” (Proverbs 14:22). Evil thoughts should never enter into a man. These evil thoughts try to steal the power of your soul. It is your responsibility to ensure that they do not rule over you. Paul the Apostle writes, “Casting down arguments and every high thing that exalts itself against the knowledge of God, bringing every thought into captivity to the obedience of Christ” (II Corinthians 10:5).

Sow down the Scripture verses in your heart and meditate the verses of promises. Think over the love of Calvary often and praise Him. Then you can easily overcome the evil.

How did the sin come into existence? Eve began to think before eating the forbidden fruit. She thought that the tree was good for food, pleasant to her eyes, and a tree desirable to make one wise (Genesis 3:6). In the end, she ate it. Such a huge downfall would not have come to her if she had put a stop to her thinking in the beginning itself. The Scripture says, “For to be carnally minded is death, but to be spiritually minded is life and peace” (Romans 8:6).

To meditate: “The plans of the diligent lead surely to plenty, but those of everyone who is hasty, surely to poverty” (Proverbs 21:5).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நினைவுகள் எப்படி? | How Are the Thoughts? நினைவுகள் எப்படி? | How Are the Thoughts? Reviewed by Christking on April 22, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.