சொன்னபடி உயிர்த்தெழுந்தார்! | Risen, as He Said! - Christking - Lyrics

சொன்னபடி உயிர்த்தெழுந்தார்! | Risen, as He Said!



"அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்" (மத். 28:6).

கிறிஸ்தவ மார்க்கத்தின் மேன்மை, அந்த விலையேறப்பெற்ற மகிமையான உயிர்த்தெழுதலில் இருக்கிறது. மற்ற மார்க்கத்துக்கும், கிறிஸ்தவ மார்க்கங்களுக்கும் உள்ள பெரிய மாறுபாடு "கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்" என்பதே. அதுவே உங்களுடைய வெற்றி முழக்கம். இயேசு மரணத்தையும், பாடுகளையும், சாத்தானையும் ஜெயித்து உயிர்த்தெழுந்தார்!

"உயிர்த்தெழுந்தார்" என்ற ஒன்று இல்லையென்றால், வருங்காலத்தில் உங்களுக்கு எதிர்பார்ப்பு ஒன்றுமில்லை. கிறிஸ்தவ மார்க்கத்தின் அடிப்படை அஸ்திபாரமே கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில்தான் இருக்கிறது. ஆகவேதான் கிறிஸ்தவ மார்க்கத்திற்கு விரோதமாய் எத்தனையோ இயக்கங்கள் தோன்றினபோதிலும் தேவ பிள்ளைகள் சோர்ந்து போகாமல் வெற்றி நடைபோட முடிகிறது.

வேதம் சொல்லுகிறது, "மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரனுமாயிருக்கிறார்" (ரோம. 1:5). உயிர்த்தெழுதலினால் அவர் பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனாயிருக்கிறார். இயேசுவின் உயிர்த்தெழுதலினாலே உங்களுக்கு வருகிற ஆசீர்வாதங்கள் என்ன?

முதலாவதாக, அவர் உங்களை உயிர்ப்பிக்கிறார். சங்கீதக்காரன் சொல்லுகிறான், "உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ?" (சங் 85:6). இயேசு உயிர்த்தெழுந்ததினாலே நிச்சயமாகவே உங்களையும் உயிர்ப்பிக்க அவர் வல்லவர். நீங்கள் அவரிலே மகிழ்ந்து களிகூரும்படி உங்களை உயிர்ப்பிக்கிறார். அக்கிரமங்களிலும், பாவங்களிலும் மரித்த உங்களை உயிர்ப்பிக்கிறார். உன்னதங்களில் அவரோடுகூட இருக்கும்படி உயிர்ப்பிக்கிறார்.

இரண்டாவதாக, வேதம் சொல்லுகிறது, "இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார் (ரோமர் 8:11).

அநேகர் குடும்பத்துக்கும், கர்த்தருக்கும் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய முடியாமல் சோர்ந்து போகிறார்கள். கவலைப்படாதீர்கள். இந்த உயிர்த்தெழுந்த நாளிலே கர்த்தர் சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களை உயிர்ப்பிப்பார்.

உங்களுடைய சரீரம் பெலவீனமுள்ளதுதான். ஆனால் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவியானவர் உற்சாகமுள்ளவர். உங்களுடைய சரீரம் கர்த்தருடைய ஆலயம் என்பதை அவர் அறிந்திருக்கிறதினாலே உங்கள் சரீரத்தை உயிர்ப்பிக்க உயிர்த்தெழுந்த தேவகுமாரன் வல்லமையுள்ளவராயிருக்கிறார்.

தேவபிள்ளைகளே, இந்த உயிர்த்தெழுந்த நாளிலே பெலவீனத்தோடு இருக்கிறீர்களா? உயிர்த்தெழுந்த இயேசு இப்பொழுதே அன்போடு உங்கள் அருகிலே கடந்து வந்து உங்களை உயிர்ப்பித்து திடப்படுத்துவார்.

நினைவிற்கு:- "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசி நாளில் பூமியின் மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன்" (யோபு. 19:25).


“He is not here; for He is risen, as He said” (Mathew 28:6).

The greatness of the Christian religion lies on its precious, glorious resurrection. The biggest difference between the Christianity and other religions is the Resurrection of Christ. That is your proclamation of victory. Jesus Christ by his resurrection, prevailed over the death, suffering and satan.

If there had not been a Resurrection, you will not have any expectation in the future. The basic foundation of Christianity lies in the Resurrection of Christ. It is because of this, the children of God can walk victoriously in spite of several movements arising against the Christianity.

The Scripture says, “concerning His Son Jesus Christ our Lord, who was born of the seed of David according to the flesh and declared to be the Son of God with power according to the Spirit of holiness, by the resurrection from the dead” (Romans 1:3, 4). He stays as the Son of God declared by His resurrection from the dead. What are the blessings you receive through the Resurrection of Jesus Christ?

Firstly, He resurrects you. The Psalmist says, “Will you not revive us again, that your people may rejoice in you?” (Psalm 85:6). Since Jesus Christ was Resurrected, He is powerful to resurrect you too. He resurrects you for you to rejoice in Him. He resurrects you, who have died in iniquities and sins. He resurrects you for you to be with Him in the Most High.

Secondly, the Scripture says, “But if the Spirit of Him who raised Jesus from the dead dwells in you, He who raised Christ from the dead will also give life to your mortal bodies through His Spirit who dwells in you” (Romans 8:11).

Many people become weary of being unable to fulfil their responsibilities towards their families and to God. Do not worry. On this day of Resurrection, God will resurrect your mortal bodies.

Indeed your body is weak. But the Holy Spirit who raised Christ from the dead is enthusiastic. As He knows that your body is the temple, the Resurrected Son of God is powerful to resurrect your body.

Dear children of God, are you weak on this day of Resurrection? Resurrected Jesus will come near you with love , resurrect you and strengthen you.

To meditate: “For I know that my redeemer lives and He shall stand at last on the earth” (Job 19:25).

Author : Pr. Joseph Osborne Jebadurai
சொன்னபடி உயிர்த்தெழுந்தார்! | Risen, as He Said! சொன்னபடி உயிர்த்தெழுந்தார்! | Risen, as He Said! Reviewed by Christking on April 11, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.