Ivarae perumal - Tamil Christian Songs Lyrics

    Ivarae perumal - Tamil Christian Songs Lyrics



    இவரே பெருமான் மற்றப்
    பேர் அலவே பூமான் இவரே பெருமான்
    கவலைக் கிடங்கொடுத் தறியார்
    பவவினை யாதுமே தெரியார் இப்
    பவனமீது நமக்குரியார்

    - இவரே
    குருடர்களுக் குதவும் விழியாம் பவக்
    கரும இருளை நீக்கும் ஒளியாம் தெய்வம்
    இருக்கும் தலஞ்செல் வாசல் வழியாம்

    - இவரே
    பலபிணி தீர்க்கும் பரிகாரி சொல்லும்
    வலமையில் மிக்க விபகாரி எக்
    குலத்துக்கும் நல்ல உபகாரி

    - இவரே

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Ivarae perumal - Tamil Christian Songs Lyrics Ivarae perumal - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on February 11, 2015 Rating: 5
    Powered by Blogger.