Karthava Yougam Yougamai / கர்த்தாவே யுக யுகமாய் - Tamil Christian Songs Lyrics - Christking - Lyrics

    Karthava Yougam Yougamai / கர்த்தாவே யுக யுகமாய் - Tamil Christian Songs Lyrics

    1. கர்த்தாவே, யுகயுகமாய்
    எம் துணை ஆயினீர்;
    நீர் இன்னும் வரும் காலமாய்
    எம் நம்பிக்கை ஆவீர்.

    2. உம் ஆசனத்தின் நிழலே
    பக்தர் அடைக்கலம்;
    உம் வன்மையுள்ள புயமே
    நிச்சய கேடகம்.

    3. பூலோகம் உருவாகியே,
    மலைகள் தோன்றுமுன்,
    சுயம்புவாய் என்றும் நீரே
    மாறா பராபரன்.

    4. ஆயிரம் ஆண்டு உமக்கு
    ஓர் நாளைப் போலாமே;
    யுகங்கள் தேவரீருக்கு
    ஓர் இமைக்கொப்பாமே

    5. சாவுக்குள்ளான மானிடர்
    நிலைக்கவே மாட்டார்;
    உலர்ந்த பூவைப்போல் அவர்
    உதிர்ந்து போகிறார்.

    6. கர்த்தாவே, யுக யுகமாய்
    எம் துணை ஆயினீர்;
    இக்காட்டில் நற் சகாயராய்
    எம் நித்திய வீடாவீர்.

    Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
    Karthava Yougam Yougamai / கர்த்தாவே யுக யுகமாய் - Tamil Christian Songs Lyrics Karthava Yougam Yougamai / கர்த்தாவே யுக யுகமாய் - Tamil Christian Songs Lyrics Reviewed by Christchoir on March 25, 2015 Rating: 5

    No comments:

    Powered by Blogger.