Thudhi Paaduvai Nenjamea / துதி பாடுவாய் நெஞ்சமே - Tamil Christian Songs Lyrics

துதி பாடுவாய் நெஞ்சமே இயேசுவை
அவர் துதி சொல்லி வரவே தேவன் தந்திட்ட வாழ்வு இதுவே
முன் அறிந்தார் முன் குறித்தார் நம்மை அழைத்தார்
மகிமை படுத்தினார், இன்னும் மகிமை படுத்துவார்
பூமியின் மண்ணை மரக்காலால் அளந்தவரும் அவரே
வானங்களை திரைப்போலாய் விரித்தவரும் அவரே
நட்சத்திரங்களை பெயர் சொல்லி அழைத்தவரும் அவரே
உன்னையும் என்னையும் உள்ளங்கையில் வரைந்தவரும் அவரே
வானம் திறந்து மன்னாவால் போஷித்தவரும் அவரே
செங்கடல்தனை இரண்டாக பிளந்தவரும் அவரே
மோசேயின், கைகோலால் அற்புதங்கள் செய்தவரே
உலகம் முடியும் வரை துணையாய், நம்முடன் இருப்பவரே
இழந்து போன என்னை தேடி இரட்சிக்க வந்தவரே
பாவ குழியில் என்னை மீட்டு புது வாழ்வு தந்தவரே
ஜீவனுள்ள நாளெல்லாம் கிருபையால் காப்பவரே
உலகம் முடிவில் என்னை அழைத்து பரலோகில் சேர்ப்பவரே
Songs Lyrics,Tamil Lyrics,Tamil Christian Songs Lyrics
Thudhi Paaduvai Nenjamea / துதி பாடுவாய் நெஞ்சமே - Tamil Christian Songs Lyrics 
 Reviewed by Christchoir
        on 
        
April 03, 2015
 
        Rating:
 
        Reviewed by Christchoir
        on 
        
April 03, 2015
 
        Rating: 
       Reviewed by Christchoir
        on 
        
April 03, 2015
 
        Rating:
 
        Reviewed by Christchoir
        on 
        
April 03, 2015
 
        Rating: 
 
No comments: