Parama Alaipin Pandhaya : Lyrics

பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்
நான் இலக்கை நோக்கி ஓடுகிறேன்
ஓடுகிறேன் நான் ஓடுகிறேன்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
அல்லேலுயா அல்லேலுயா -2
1. இலாபமான அனைத்தையுமே
நான் நஷ்டமென்று கருதுகிறேன்
இயேசு ராஜவின் இந்த வேலைக்காக
மகிழ்ச்சியுடன் நான் ஓடுகிறேன்
2. எத்தனை தான் இடர்கள் வந்தாலும்
விசுவாசத்திலே நிலைத்திருப்பேன்
எனக்காக இயேசு நியமித்த
இந்த பாதையிலே நான் ஓடுகிறேன்
3. என் மணவாளன் இயேசு ராஜாவை
நான் காணவே வாஞ்சிக்கிறேன்
என் ஆசை எல்லாம் என் இயேசு தானே
அவர் பொன்முகம் தான் நான் பார்க்கணுமே
4. என் ஆவி ஆத்மா சரீரமெல்லாம்
என் இயேசுவுக்காய் அர்ப்பணிக்கிறேன்
நான் உயிர் வாழும் இந்த நாட்கள் எல்லாம்
இயேசுவுக்காய் நான் ஓடுகிறேன்
Parama Alaipin Pandhaya : Lyrics
Reviewed by Christking
on
June 09, 2016
Rating:
