Karthar Unnai Menmaiyaga Vaipaar : Lyrics

    Karthar Unnai Menmaiyaga Vaipaar : Lyrics

    Karthar Unnai Menmaiyaga Vaipaar

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்
    நீ கலங்காதே மனமே -2

    1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்
    களங்களில் நிரம்பிடும் தானியமும் -2
    நிறைவான நன்மை உண்டாக
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போது
    கர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்
    வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்து
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்
    தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2
    சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    4. உன் தேசம் முழுவதும் மழை பொழியும்
    உனக்காக பொக்கிஷத்தை திறந்திடுவார் -2
    பிறருக்கு நீயும் கடன் கொடுக்க
    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2

    Worship Songs Lyrics,
    Karthar Unnai Menmaiyaga Vaipaar : Lyrics Karthar Unnai Menmaiyaga Vaipaar : Lyrics Reviewed by Christking on July 24, 2016 Rating: 5
    Powered by Blogger.