அன்பே பெரியது!
பட்டி மன்றங்களில், பேனா முனையா? வாள் முனையா? எது வலியது? என்ற கேள்வியோடு பேச்சுப் போட்டி ஆரம்பிக்கும். கல்வியா? செல்வமா? வீரமா? எது சிறந்தது? முடிவில் நடுவர் தீர்ப்பு வழங்குவார்!
1 கொரி. 13-ல், அப்.பவுல் ஒரு பட்டிமன்றம் வைக்கிறார். விசுவாசம் பெரியதா? நம்பிக்கை பெரியதா? அன்பு பெரியதா? என்பதே அந்தக் கேள்வி! அவர் தனக்குத்தானே வாதாடி, தானே நடுவராகவும் இருந்து “அன்பே பெரியது” என்று தீர்ப்பளிக்கிறார்.
ஆம், அன்பில்லாத விசுவாசம், குளிர்ந்தது. அன்பில்லாத நம்பிக்கை யாலும் பயனில்லை! ஆனால் அன்போ, விசுவாசத்தைத் தட்டி எழுப்பு கிறது! நம்பிக்கையை தூண்டிவிடுகிறது! அன்பு நித்திய நித்தியமானது! அன்பே பெரியது!
விசுவாசத்தால் மலைகளைப் பெயர்க்கலாம். வீடு, நிலம், கார், பங்களா எல்லாம் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அன்பில்லாவிட்டால், அவையெல்லாம் உயிரில்லாத சரீரமாகத்தான் இருக்கும்!
தமிழில், வேதாகமம் ஒத்த வாக்கிய விளக்க உரையை எழுதிய, சகோ. என். ஆசீர்வாதம் அவர்களைக் குறித்து, நான் ஆச்சரியப் படுவதுண்டு. இந்த ஒத்த வாக்கியப் புத்தகத்தை தனியராக எழுதுவதற்கு, அவர் எத்தனை ஆண்டு காலங்கள் இரவு பகலாக உழைத்திருப்பார்? எவ்வளவு தியாகமும், பொருள் செலவும் செய்திருப்பார்?
இந்த விளக்க உரையின் முதல் பக்கத்தில், “என் ஆண்டவராகிய இயேசுவே, உமக்காக எந்த கடின உழைப்பையும் பொருட்படுத்தாத நேசத்தை, எனக்குத் தந்தருளும்” என்பதே அந்த ஜெபம். ‘LORD JESUS, GIVE ME SUCH A LOVE FOR THEE, THAT NO LABOUR MAY SEEM TOO HARD, IF DONE FOR THY SAKE‘.
கிறிஸ்துவின் மேலுள்ள நேசமே மிஷனெரிகளை காட்டு மிராண்டிகள் மத்தியில் கொண்டு சென்றன. அந்த நேசமே தியாகமான ஊழியத்திற்கு அஸ்திபாரமிட்டது. அந்த நேசமே, இரத்த சாட்சிகளாக மரிக்கவும் அவர் களை ஏவி எழுப்பியது! தேவபிள்ளைகளே, நீங்களும் கல்வாரி நேச அன்பினால் நிரப்பப்படுவீர்களாக!
அன்பே பெரியது!
Reviewed by Christking
on
August 02, 2017
Rating: