அன்புக்கோர் அத்தியாயம்! - Christking - Lyrics

அன்புக்கோர் அத்தியாயம்!


பில்லிகிரகாமிடம், ஒருமுறை ஒரு பத்திரிக்கை நிருபர் வந்து, முழு வேதத்தில் உங்களுக்குப் பிரியமான வேத பகுதி எது என்று கேட்டார். உடனே அவர், “அன்பைப் பற்றியுள்ள 1கொரிந்தியர் 13-ம் அதிகாரமே எனக்கு மிகவும் பிரியமான வேத பகுதி” என்று சொன்னார், காரணத்தையும் விளக்கினார்.

அன்புக்கோர் அதிகாரம்! ஆம், உலகத்தின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த வல்லமையானது அன்புக்கு உண்டு. விசுவாசத்திற்கென்று எபிரெயர் 11-ம் அதிகாரம் இருக்கிறது. வேத வாக்கியங்களின் முக்கியத்துவத்திற்கென்று 119-ம் சங்கீதம்; எழுப்புதலுக்கென்று ஏசாயா 64-ம் அதிகாரம்; கல்வாரிக்கென்று ஏசாயா 53-ம் அதிகாரம்; அதுபோலவே அன்புக்கென்று கர்த்தர் 1 கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை ஒதுக்கி வைத்திருக்கிறார்.

ஒருமுறை கிறிஸ்துவிடம் வேதபாரகன் ஒருவன், “கற்பனை களிலெல்லாம் பிரதானமான கற்பனை எது?” என்று கேட்டான். இது ஒரு சாதாரணமான கேள்வியல்ல. அந்த நாட்களில் முழு நியாயப் பிரமாணம், தீர்க்கதரிசன பகுதிகளில் கர்த்தருடைய கட்டளைகளை யெல்லாம் வேத பண்டிதர்கள் தொகுத்து 3,600 கற்பனைகளை திரட்டி வைத்திருந்தார்கள்! இதில் பிரதானமான கற்பனை எது?

எல்லா கற்பனையும் முக்கியமானதுதான்... என்று இயேசுகிறிஸ்து பூசி மெழுகிக் கொண்டிருக்கவில்லை! அவர் உடனே திட்டமாய்ச் சொன்னார், “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழு பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே, பிரதான கற்பனை” என்றார்.

இரண்டாவது பிரதானமானது எது? இ@ய”கிறிஸ்து, தொடர்ந்து சொன்னார், “இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்ன வென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதைப் போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை” என்றார்.

“அன்பே பெரியது” என்றார் பவுல்! (1கொரி. 13:13). அன்பே பிரதானமான கற்பனை என்றார் கிறிஸ்து (மாற். 12:31). “எல்லா வற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களா யிருங்கள்” என்றார் அப். பேதுரு (1பேதுரு 4:8).

அன்புக்கோர் அத்தியாயம்! அன்புக்கோர் அத்தியாயம்! Reviewed by Christking on August 02, 2017 Rating: 5
Powered by Blogger.