Arasanai Kanamalirupomo

Album : | Artist :
அரசனைக் காணாமலிருப்போமோ நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ யூத
யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே இஸ்ரேல்
ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே
ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே யூத
தேசோ மயத்தாரகை தோன்றுது பார் மேற்குத்
திசை வழி காட்டிமுன் செல்லுது பார்
பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே அவர்
பொன்னடி வணங்குவோம் நடவுமின்றே யூத
அலங்காரமனை யன்று தோணுது பார் அதன்
அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்
இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார் நாம்
எடுத்த கருமம் சித்தியாகிடும் பார் யூத
அரமனையில் அவரைக் காணோமே அதை
அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே
மறைந்த உடு அதோ பார் திரும்பினதே பெத்லேம்
வாசலில் நமைக்கொண்டு சேர்க்குது பார் யூத
பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே ராயர்
பொற்கழல் அர்ச்சனை புரிவோமே
வன்கண்னன் ஏரோதைப் பாராமல் தேவ
வாக்கினால் திரும்பினோம் சோராமல் யூத
Arasanai Kanamalirupomo
Reviewed by Christking
on
January 21, 2018
Rating:
