Aroopiyae Arupa Sorupiyae

Album : | Artist :
அரூபியே அரூப சொரூபியே எமை
ஆளும் பரிசுத்தரூபியே அரூப சொரூபியே
திருவிணா டுறை நிதான கருணையா திபதி மோன
சுரநரர் வணங்கும் வான ஒரு பரா பர மெய்ஞ்ஞான
அதி காரண அரூபியே அசரீரி சத்ய
நீதி ஆரண சொரூபியே
வேத வாசக சமுத்ர ஓதும் வாய்மைகள் சுமுத்ர
தீதிலா துயர் விசித்ர ஜாதி யாருட பவித்ர
சீரு லாவிய தெய்வீகமே திரி முதல் ஒரு பொருள்
ஏரு லாவிய சிநேகமே
பாருளோர் பணிந்து போற்றும் ஆரியா அடியர் சாற்றும்
நேரமே புகழை ஏற்றும் வீரமாய் மனதை ஆற்றும்
பத்தர் பாதகம் அடாமலே பசா சுலகுடல்
சத்ரு சோதனை படாமலே
அத்தனார் தேவ கோபம் நித்ய வேதனைகள் சாபம்
முற்றும் மாறிடத் தயாபம் வைத்து நீடுன் ப்ரதாபம்
Aroopiyae Arupa Sorupiyae
Reviewed by Christking
on
January 21, 2018
Rating:
