Anantha Nghana Sorupaa

Album : | Artist :
அனந்த ஞான சொரூபா நமோ நம
அனந்த ஞான சொரூபா
கனங்கொள் மகிமையின் கர்த்தாவே
காத்திர நேத்திர பர்த்தாவே நரர்
காண வந்தாரே பரன் நரர் காண வந்தாரே
கருணாகர தேவா அனந்த ஞான சொரூபா
அந்தப் பரமானந்த குணாலா ஆதத்தின் தீதற்ற மனுவேலா
எமை ஆண்டு கொண்டாரே பரன் எமை ஆண்டு கொண்டாரே
ஞானாதிக்கத் துரையே அனந்த ஞான சொரூபா
ஆடுகளுக் குரிமைக் கோனே ஆரண காரணப் பெருமானே
நரர்க் கன்பு கூர்ந்தாரே பரன் நரர்க் கன்பு கூர்ந்தாரே
கிருபாசனத் தானே அனந்த ஞான சொரூபா
பந்தத் துயரந் தீர்த்தாரே பாவத்தைச் சாபத்தை ஏற்றாரே
எமைப் பார்க்க வந்தாரே பரன் எமைப் பார்க்க வந்தாரே
பரமாதிக்கத் தோரே அனந்த ஞான சொரூபா
Anantha Nghana Sorupaa
Reviewed by Christking
on
January 21, 2018
Rating:
