Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் - Christking - Lyrics

    Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம்

    ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
    ஆறுதல் அடைகின்றேன்
    அமைதி பெறுகின்றேன்

    1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகை
    தாங்கிடும் நங்கூரமே (3) தினம்

    2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேச
    எனைக் காக்கும் புகலிடமே – தினம்

    3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியே
    நீங்காத பேரின்பமே – என்னைவிட்டு

    4. இருள் நீக்கும் சுடரே என்இயேசு ராஜா
    என் வாழ்வின் ஆனந்தமே

    5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதா
    மாபெரும் சந்தோஷமே

    6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்
    நல்ல சமாரியனே
    Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் Aatkonda Deivam - ஆட்கொண்ட தெய்வம் Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.