Blessing by Father! - பிதாவினால் ஆசீர்வாதம்! - Christking - Lyrics

Blessing by Father! - பிதாவினால் ஆசீர்வாதம்!

[restabs alignment="osc-tabs-left" responsive="true" icon="true" text="More"]
[restab title="Tamil" active="active"]
என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்” (மத். 25:34).

ஒரு சபையில் பெரிய எழுப்புதல் ஏற்பட்டு, விசுவாசிகள் சந்தோஷமாகவும், சமாதானமாகவும் இருந்தார்கள். குடும்பம், குடும்பமாக ஆலய ஆராதனையில் பங்கு பெற்றது மட்டுமல்ல, கர்த்தருக்காக ஏதாகிலும் செய்ய வேண்டுமென்ற உற்சாகத்துடனும், முகமலர்ச்சியுடனும் காணப்பட்டார்கள். வாலிபர்களும், சிறு பிள்ளைகளும் கூட, அபிஷேகத்தைப் பெற்று, கர்த்தருக்காக உழைத்தார்கள்.

இந்த எழுப்புதலின் இரகசியத்தை அந்த போதகரிடம் விசாரித்தேன். அவர் சொன்னார், “நானும் என் மனைவியுமாக இணைந்து, எங்களுடைய குடும்பத்துக்காகவும், சபைக்காகவும் ஊக்கமாய் ஜெபிப்போம். குடும்பத்தைக் கர்த்தர் ஆசீர்வதிக்கும் படியாகவும், ஒருமனப்பாட்டையும், அன்பின் அபிஷேகத்தையும் தரவேண்டுமென்றும் மன்றாடுவோம். பூமியிலே இரண்டுபேர் ஒருமனப்பட்டு ஜெபித்தால், பரலோக தேவன் அதை வாய்க்கச் செய்வார் அல்லவா?” என்றார்.

நீங்கள் மற்றவர்களோடு ஒருமனப்படுவதைப் பார்க்கிலும், உங்கள் வாழ்க்கை துணையோடு ஒருமனப்பட்டு ஜெபிப்பது நல்லது. காரணம், கணவனும், மனைவியும் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். ஒரே குடும்பமாயிருக்கிறார்கள். அவர்கள் ஒரே நோக்கமுடையவர்கள். அவர்களுக்கு ஜெபிக்கவும் போதுமான நேரம் இருக்கும். உங்களுடைய குடும்பமும், சபையும், ஆசீர்வதிக்கப்பட வேண்டுமென்றால், கணவனும், மனைவியுமாக ஒருமனதோடு ஜெபியுங்கள்.

கட்டாயப்படுத்தி மற்றவர்களை ஜெபிக்க வைக்காதிருங்கள். அன்பினால் ஏவப்பட்ட ஜெபமே, மகா வல்லமையுள்ளது. “அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக் கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய கனத்தைச் செய்யுங்கள்” (1 பேதுரு 3:7).

கர்த்தர் உங்களுடைய குடும்பத்தின் பொறுப்பை, உங்கள் கரத்தில்தான் கொடுத்து வைத்திருக்கிறார். அதை ஏனோதானோ என்று எண்ணாதிருங்கள். உங்கள் பிள்ளைகளைக் குறித்த கணக்கை, கர்த்தர் உங்களுடைய கரத்தில்தான் கேட்பார். அநேக கணவன்மார், பிள்ளைகளுடைய ஆவிக்குரிய ஜீவியத்தை கவனிப்பதில்லை. சிலர் தங்கள் பிள்ளைகளை பாட்டி, தாத்தா வீட்டில் விட்டுவிடுகிறார்கள். இதனால் பிள்ளைகள், வாலிபப்பருவம் வரும்போது, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வேண்டியதா யிருக்கிறது.

கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடைய பெயரை சொல்லி ஜெபிக்க வேண்டும். பிள்ளைகளைக் கர்த்தர் ஞானத்தின் ஆவியினால் நிரப்பும்படி மன்றாடுங்கள். ஒரு தாயார் சொன்னார்கள், “என் பிள்ளைகள் தேர்வு எழுதப் போகும்போது, தேர்வு ஆரம்பிக்கிற நேரத்திலிருந்து, முடிகிறது வரையிலும் உபவாசமிருந்து ஜெபிப்பேன். அதனால் எங்கள் பிள்ளைகள் நன்றாகப்படித்து உயர்ந்த நிலைமைக்கு வந்தார்கள். “நீ வாலாகாமல் தலையாவாய், நீ கீழாகாமல் மேலாவாய்” என்ற வாக்குத்தத்தத்தைக் கொண்டு மன்றாடினதினால், பிள்ளைகள் ஆவிக்குரிய பிரகாரமாகவும் ஆசீர்வதிக்கப் பட்டிருக்கிறார்கள்” என்றார்கள்.
நினைவிற்கு:- “இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்” (ஆதி. 17:9).

[/restab]
[restab title="English"]
“Come, you blessed of my Father, inherit the kingdom prepared for you from the foundation of the world” (Mathew 25:34).

A church experienced great Revival and the believers were happy and peaceful. They not only participated as families in the worships but also were in possession of great enthusiasm and broad face to do something for God. Even the youth and the children were anointed and were toiling for God.

I met the pastor of that church and inquired about the secret behind the revival. He said, “I, along with my wife, used to pray together earnestly for our family and the church. We will be pleading to God to bless our family and to give us the sense of oneness and the anointment of love. When two persons pray with one accord, the Heavenly Father will make things done. Is it not?”

It is better for you to pray in accord with your life partner than with others. The reason is that the husband and wife remain one flesh and one family. Their goal will be the same and will find sufficient time for prayer. If you want your family and the church to be blessed, pray in unison as husband and wife.

Never make others pray out of compulsion. The prayer which is inspired by love, alone is most powerful. “Husbands, likewise, dwell with them with understanding, giving honour to the wife, as to the weaker vessel and as being heirs together of the grace of life, that your prayers may not be hindered” (I Peter 3:7).

God has given the responsibility of your family in your hands only. Do not be casual towards this responsibility because it is you who will be made accountable by God for your children. Several husbands do not concentrate on the Spiritual life of their children. Some people make their children stay with their grandparents. Because of this, the children are facing several problems when they attain the youth stage.

Husband and wives should pray saying the names of their children. Plead with God for Him to fill your children with Spirit of wisdom. One mother said, “When my children appear for the examinations, I will be fasting and praying the entire duration of the examinations. That made my children study well and rise to great positions. When pleaded with the promise that ‘you will not be made the tail but the head and you shall be above only and not be beneath’ the children will be blessed spiritually too.
To meditate: “As for you, you shall keep my covenant, you and your descendants after you throughout their generations” (Genesis 17:9).

[/restab][/restabs]“
Blessing by Father! - பிதாவினால் ஆசீர்வாதம்! Blessing by Father! - பிதாவினால் ஆசீர்வாதம்! Reviewed by Christking on May 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.