Meghamea Magimayin - மேகமே மகிமையின் மேகமே - Christking - Lyrics

Meghamea Magimayin - மேகமே மகிமையின் மேகமே

மேகமே மகிமையின் மேகமே
இந்த நாளிலே இறங்கி வாருமே
மேகமே மகிமையின் மேகமே
வந்தால் போதுமே எல்லாம் நடக்குமே

ஏகமாய் துதிக்கும்போது
இறங்கின மேகமே
ஆலயம் முழுவதும்
மகிமையால் நிரப்புமே

வானம் திறக்கணும்
தெய்வம் பேசணும்
நேச மகனென்று
நித்தம் சொல்லணும்

மறுரூபமாக்கிடும்
மகிமையின் மேகமே
முகங்கள் மாறணுமே
ஒளிமயமாகணுமே

வாழ்க்கைப்பயணத்திலே
முன்சென்ர மேகமே
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுமே

கையளவு மேகம் தான்
பெருமழை பொழிந்தது
என் நேச எல்லையெங்கும்
பெருமழை வேண்டுமே
Meghamea Magimayin - மேகமே மகிமையின் மேகமே Meghamea Magimayin - மேகமே மகிமையின் மேகமே Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.