Nambi Vantha Manitharellam - நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் - Christking - Lyrics

Nambi Vantha Manitharellam - நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம்

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே

மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக் கொள்வீர்
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுக்கள்
அணுகாமல் காப்பாற்றுவீர்

என் பெலன் நீர்தானே
என் கேடகம் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன் - நான்

கானானியப் பெண் ஒருத்தி
கத்திக் கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் நம்பிக்கை பெரியது என்று
பாராட்டிப் புதுமை செய்தீர்

கிருபை சூழ்ந்து கொள்ளும்
உம் பேரன்பு பின்தொடரும்
கர்த்தருக்குள் இதயம் களிகூர்ந்து தினமும்
காலமெல்லாம் புகழ் பாடும்

குருடன் பர்திமேயு
கூப்பிட்டான் நம்பிக்கையோடு
தாவீதின் மகனே எனக்கு இரங்கும் என்று
ஜெபித்து பார்வை பெற்றான்

நம்பி வந்த குஷ்டரோகியை
நலமாக்கி அனுப்பினீரே
மரித்த மகளையே உயிர்பெறச் செய்தீர்
யவீர் உம்மை நம்பினதால்

இக்கட்டு துன்ப வேலையில்
காக்கும் அரணானீர்
பூரண சமாதானம் பூரண அமைதி
தினம் தினம் நிரப்புகிறீர்
Nambi Vantha Manitharellam - நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் Nambi Vantha Manitharellam - நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.