Nirpandhamaana Manithan Naan - நிர்ப்பந்தமான மனிதன் நான் - Christking - Lyrics

Nirpandhamaana Manithan Naan - நிர்ப்பந்தமான மனிதன் நான்

நிர்ப்பந்தமான மனிதன் நான்
இயேசுவே எனக்கு இரங்கிடுமே

நான் செய்ய விரும்பாததை செய்கின்றேன்
நான் பேசக் கூடாததை பேசுகின்றேன்
நான் நினைக்கக் கூடாததை நினைக்கின்றேன்
என்னை விடுவித்துக் காத்தருளும் என் இயேசுவே

பரிசுத்தமாய் வாழ வாஞ்சிக்கிறேன்
ஜெய வாழ்வு இன்னும் என்னில் இல்லையே
உம் அக்கினி அபிஷேகம் என்னில் ஊற்றிடும்
பரிசுத்தமாய் நானும் வாழ்ந்திடுவேன்

என் சத்ருக்களை சிநேகிக்க முடியவில்லை
என் ஜென்ம குணம் இன்னும் மாறவில்லை
உம் அன்பை என்னுள்ளில் ஊற்றிவிடும்
உமக்காய் சாட்சியாய் என்றும் வாழுவேன்

என் பெலவீன நேரத்தில் சோர்ந்து போனேன்
மற்றவர் வாய்ச் சொல்லால் மனம் உடைந்தேன்
என் இயேசுவே நீர் சீக்கிரம் வாரும்
உம்மோடு வாழவே வாஞ்சிக்கிறேன்

பாவி என்று என்னை ஒதுக்கினார்கள்
இப்பாவ உலகத்தில் அலைந்திருந்தேன்
உம் அனாதி சினேகத்தால் இழுத்துக் கொண்டீர்
உம் பிள்ளையாய் எனை மாற்றி வாழ்வளித்தீர்

நான் சோர்ந்து தளர்ந்திட்ட வேளைகளில்
தேற்றுவாரின்றி நான் கலங்குகையில்
உம் மெல்லிய சத்தத்தால் என்னைத் தேற்றினீர்
உம் சேவையில் நிலைத்திட உதவி செய்தீர்
Nirpandhamaana Manithan Naan - நிர்ப்பந்தமான மனிதன் நான் Nirpandhamaana Manithan Naan - நிர்ப்பந்தமான மனிதன் நான் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.