Naan Nadanthu Vantha Pathaigal - நான் நடந்து வந்த பாதைகள் - Christking - Lyrics

    Naan Nadanthu Vantha Pathaigal - நான் நடந்து வந்த பாதைகள்

    நான் நடந்து வந்த பாதைகள் கரடு மேடுகள்
    நான் கடந்து வந்த பாதைகள் முட்கள் வேலிகள்

    நடக்க முடியல டாடி நடக்க முடியல
    தாங்கிக் கொள்ளுங்க - கரத்தில்
    ஏந்திக்கொள்ளுங்க

    என் சுய பெலத்தால் ஓடிப் பார்த்தேன்
    ஓட முடியல - என் மன பெலத்தால்
    நடந்து பார்த்தேன் நடக்க முடியல
    என் தோள் பெலத்தால் சுமந்து பார்த்தேன்
    சுமக்க முடியல - என் கால் பெலத்தால்
    கடந்து பார்த்தேன் கடக்க முடியல

    என் ஆள் பெலத்தால் ஆளப் பார்த்தேன்
    ஆள முடியல - என் பண பெலத்தால்
    படைக்கப் பார்த்தேன் படைக்க முடியல
    என் சொல் பெலத்தால் சாதிக்கப் பார்த்தேன்
    ஒன்றும் முடியல - என் வாய் பெலத்தால்
    வாழப் பார்த்தேன் வாழ முடியல
    Naan Nadanthu Vantha Pathaigal - நான் நடந்து வந்த பாதைகள் Naan Nadanthu Vantha Pathaigal - நான் நடந்து வந்த பாதைகள் Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.