Nithya Raja Nirmala Natha - நித்திய இராஜா நிர்மல நாதா - Christking - Lyrics

Nithya Raja Nirmala Natha - நித்திய இராஜா நிர்மல நாதா

நித்திய இராஜா நிர்மல நாதா
நின் பாதம் பணிந்தேன் இக்காலையிலே
நின் பாதம் பணிந்தேன் இவ்வேளையிலே

என் மன ராஜ்யத்தில்
என்றும் அரசாளுகின்ற
ராஜாதி ராஜாவுக்கே ஸ்தோத்திரம்
இயேசு மகா ராஜாவுக்கே ஸ்தோத்திரம்

கண்ணயர்ந்த வேளையிலும்
கணிமைப்போல் காத்தவரே
கற்பகமே உமக்கு ஸ்தோத்திரம்
கண் விழித்த வேளையிலும்
கண் மேல் உம் கண் வைத்து
கருத்தாய் போதித்தவாய் ஸ்தோத்திரம்

இப்பகல் வேளையிலும்
எப்பக்கம் சூழ்ந்து நிற்கும்
இம்மானுவேலனே ஸ்தோத்திரம்
உம்முடனே நான் இணைய
என்னுடனே நீர் பிணைய
வாழ்ந்திடும் வாழ்வுக்காய் ஸ்தோத்திரம்
Nithya Raja Nirmala Natha - நித்திய இராஜா நிர்மல நாதா Nithya Raja Nirmala Natha - நித்திய இராஜா நிர்மல நாதா Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.