Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு - Christking - Lyrics

    Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு

    நன்மைகள் செய்தவர்க்கு
    நன்றியுள்ள ஆராதனை
    நாள்தோறும் செலுத்துகிறேன்
    நாளெல்லாம் செலுத்துகிறேன்

    நன்றியப்பா இயேசப்பா

    இமைப்பொழுதும் என்னை நீர்
    கைவிடவில்லை- நிமிடம்
    தோறும் விசாரித்து நடத்துகிறீர்- என்
    நாட்களெல்லாம் உம் கரத்தில் இருக்கிறது
    வருஷங்களை நன்மையினால் முடிசூட்டினீர்

    உலகம் என்னைத் தூற்றும்போது
    தேற்றினீரைய்யா- உறவெல்லாம்
    வெறுத்தபோது அன்பு கூர்ந்தீரே
    நண்பன் என்னைப் பகைத்தப்போது
    நண்பனானீரே- உண்மையில்லா
    என்னையும் நீர் தேடி வந்தீரே

    பாவசேற்றில் இருந்த என்னை
    தூக்கியெடுத்தீரே- நாற்றமெல்லாம்
    கழுவி என்னை மார்பில் அணைத்தீரே
    அனுதினமும் அபிஷேகித்து மகிழ்விக்கிறீரே
    அப்பா உந்தன் சித்தம் செய்ய பழக்குவித்தீரே
    Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு Nanmaigal Seythavarkku - நன்மைகள் செய்தவர்க்கு Reviewed by Christking on May 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.