Oru Kuraivillaamal Kaathuvandheerae - ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே - Christking - Lyrics

Oru Kuraivillaamal Kaathuvandheerae - ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே

ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே
கோடி ஸ்தோத்திரமே
என்னை அதிசயமாக நடத்தி வந்தீரே
ஆயிரம் ஸ்தோத்திரமே
பதினாயிரம் ஸ்தோத்திரமே

ஆருயிரே ஆறுதலே
ஆயுளெல்லாம் காப்பவரே

வருஷத்தை நன்மையினால் முடிசூட்டி மகிழ்ந்தீரே
பாதைகள் நெய்யாய்ப் பொழிந்தீரே எல்லா
வாதைகள் நீக்கி மகிழ்ந்தீரே

என்முன்னே சென்றீரே பயணத்தைக் காத்தீரே
மகிமையால் மூடிக் கொண்டீரே எங்கள்
குடும்பத்தைக் காத்து வந்தீரே

என் விளக்கை ஏற்றினீரே இருளை அகற்றினீரே
எதிரியின் கண்கள் முன்பாக
என் தலையை நிமரச் செய்தீரே

உள்ளங்கைகளிலே என்னை வரைந்து வைத்தீரே
நீர் என் தாசன் என்றீரே
எப்படி மறப்பேன் என்றீரே

சிறுமையான என்னைத் தூக்கி எடுத்தீரே
உம் சிறகால் என்னை மூடினீரே
கரத்தால் என்னைத் தாங்கினீரே

அநாதி சிநேகத்தினால் என்னை நேசித்தீரே
உம் கிருபை என்னைத் தாங்கியதே
உம் காருண்யம் என்னைத் உயர்த்தியதே
Oru Kuraivillaamal Kaathuvandheerae - ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே Oru Kuraivillaamal Kaathuvandheerae - ஒரு குறைவில்லாமல் காத்துவந்தீரே Reviewed by Christking on May 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.