Sathiyamum kirubaiyum - சத்தியமும் கிருபையும் வருக வருகவே - Christking - Lyrics

    Sathiyamum kirubaiyum - சத்தியமும் கிருபையும் வருக வருகவே


    சத்தியமும், கிருபையும், வருக வருகவே
    நன்மையும் மேன்மையும், தொடர்க தொடர்கவே
    வலப்புறத்தில் மகிமை, இடப்புறத்தில் இனிமை
    வருக வருகவே... ஆமென், வருக வருகவே...

    பல்லவி
    மேகம் வருகுது... அக்கினி வருகுது,
    மகிமை வருகுது எங்கள் மேல்...
    வருக வருகவே...
    ஆமென், வருக வருகவே...

    சரணங்கள்

    1.கண்மணி போல் காத்தீரே,
    சென்ற காலம் முழுவதும்
    கண்ணிகளில் சிக்கிடாமல்,
    வழியெல்லாம் நடத்தினீரே
    கால் சறுக்கும் வேளைகளில்,
    கிருபை என்னை தாங்கிடுதே
    ஜெயத்தின் பாதையிலே,
    நடத்திச் செல்லுமே!

    2.வாழ்க்கை என்னும் கடலிலே,
    புயலும் காற்றும் வீசவே
    எந்தன் படகு அமிழ்ந்திடாமல்,
    அற்புதங்கள் செய்தீரே
    சர்வ வல்ல தேவனே,
    காலமெல்லாம் நடத்துமே
    சமாதான வழியில், என்னை
    கொண்டு செல்லுமே!

    3.பெரிய காரியம் செய்திடுவேன்...
    பெரியவராம் தேவனால்
    ஆவி பெலன், செயல்படுத்தி
    அக்கினியாய் வாழுவேன்
    ஆயிரமாயிரம் ஆத்துமாக்கள்,
    அன்பரண்டை சேர்ந்திடவே
    எலியாவின் ஆவியோடு,
    ஒளிவீசுவேன்!

    4. ஜீவனுள்ள நாளெல்லாம்,
    நன்மை கிருபை தொடருமே
    கர்த்தர் எந்தன் மேய்ப்பராய்,
    எனக்கு முன்னே செல்கிறார்
    ஆத்துமாவை தேற்றுவார், ஆவி
    வரம் தந்திடுவார்
    தேவ கரம் உறுதியாய்
    பற்றிடுவேனே!

    5.மோட்சக் கரை சேரவும், பொன்
    முகத்தைக் காணவும்
    நீதியின் கிரீடம் தரித்துமே,
    நித்தியமாய் வாழுவேன்
    பரிசுத்த பாதையிலே, உம்
    கிருபை முன்னே செல்லட்டும்
    மகிமையின் தேசத்திற்கு
    கொண்டு செல்லுமே!

    Sathiyamum, kirubaiyum, varuga varugave
    Nanmaiyum menmaiyum, thodarga thodargave
    Valappurathil magimai, idappurathil inimai
    Varuga varugave… Amen, varuga varugave…

    Ch: Megam varuguthu… akkini varuguthu, magimai varuguthu
    Varuga varugave… Amen, varuga varugave

    Kanmani pol kaatheere, chenra kaalam muzhuvathum
    Kannigalil sikkidaamal, vazhiyellam nadathineere
    Kaal sarukkum velaigalil, kirubai ennai thaangiduthe
    Jeyathin paathaiyile, nadathi sellume!

    Vaazhkkai ennum kadalile, puyalum kaatrum veesave
    Enthan padagu amizhnthidaamal, arputhangal seitheere
    Sarva valla thevane, kaalamellaam nadathume
    Samaathaana vazhiyil, ennai kondu sellume!

    Periya kaariyam seithiduven… periyavaraam thevanaal
    Aavi belan, seyalpaduthi akkiniyaai vaazhuven
    Aayiramaayiram aathumaakkal, anbarandai sernthidave
    Eliyaavin aaviyodu, oli veesuven!

    Sathiyamum kirubaiyum - சத்தியமும் கிருபையும் வருக வருகவே Sathiyamum kirubaiyum - சத்தியமும் கிருபையும் வருக வருகவே Reviewed by Christking on June 28, 2018 Rating: 5
    Powered by Blogger.