Mannava Ummai - மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் - Christking - Lyrics

    Mannava Ummai - மன்னவா உம்மைத் துதிக்கின்றேன்

    Album: Thunaiyalarey-3
    Singer: Ps.Reegan Dhanasekar
    Music: A Christiyaan Kutti
    Lyrics: Ps.Reegan Dhanasekar

    மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் - எந்நாளிலும்
    மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் - (2)
    மாட்சியும் வல்லமையும் (2)
    மகிமையும் ஜெயமும் உம்முடையதே (2) - மன்னவா

    1. பதினாயிரங்களில் சிறந்தவர் நீர் தானே
    பரிசுத்தம் என்பது உமது பெயர் தானே (2)
    சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே (2)
    மருதோன்றி பூங்கொத்தே வாசம் உள்ளவரே
    மாறாத மதுரமே மகத்துவமானவரே - (2) - மன்னவா

    2. ஜெய பெலமானவே ஜெயத்தை தருபவரே
    ஜெகத்தின் இரட்சகரே ஜெயம் எனக்களிப்பவரே (2)
    யுத்தத்தில் வல்லவரே சத்துருவை அழித்தவரே
    சருவ வல்லவரே சாவாமை உள்ளவரே
    சர்வத்தையும் ஆளுகிற சகாயர் நீர் தானே - (2) - மன்னவா

    3. பரலோகம் அழைத்துச் செல்ல வருகின்ற ராஜாவே
    உம்மோடு மகிழ்ந்திடவே அநுக்கிரகம் புரிந்தவரே - (2)
    உமது வருகையிலே நாங்களும் இணைந்திடவே
    ஆயத்தமாகிடுவோம் உம்மைத் துதித்திடவே
    மகிமையடைந்திடுவோம் மறுரூபம் பெற்றிடுவோம் - (2)
    - மன்னவா


    Mannava Ummai - மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் Mannava Ummai - மன்னவா உம்மைத் துதிக்கின்றேன் Reviewed by Christking on September 28, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.