Nambikkai Nangooram - நம்பிக்கை நங்கூரம் - Christking - Lyrics

    Nambikkai Nangooram - நம்பிக்கை நங்கூரம்


    நம்பிக்கை நங்கூரம் நீர் தானே
    என் வாழ்வின் நோக்கமும் நீர் தானே

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை - ஓ... நம்பிக்கை...

    1. பெலவீன நேரத்தில் நான் விழுந்திட்ட வேளையில்
    உம் கிருபை மீண்டும் என்னை தூக்கி நிறுத்தினதே
    வழிமாறி வழிமாறி நான் விலகின நேரம்
    உம் அன்பின் நேசம் என்னை மீண்டும் வனைந்ததே - ஓ... நம்பிக்கை

    2. எதிர்காலம் குறித்து நானும் கலங்கின வேளையில்
    என் சமுகம் உனக்குப் போதும் என்று சொன்னீரே
    புயல் வந்து அலை அடித்து நான் கதறிட்ட நேரங்களில்
    உம்மோடு நான் இருப்பேன் என்று வாக்கு பண்ணீரே

    நம்புவேன் நம்புவேன் என்னை நீர் இரட்சித்தீரே
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யுத்தம் செய்வீர்
    நம்புவேன் நம்புவேன் எனக்காய் நீர் யாவும் செய்து முடிப்பீரே - முடித்தீரே

    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் யாரும் இல்லை
    நீர் இல்லாமல் இந்த வாழ்க்கைக்கு அர்த்தமில்லை
    நீர் இல்லாமல் நானும் ஒன்றும் இல்லை - ஓ... நம்பிக்கை...


    Nambikkai Nangooram - நம்பிக்கை நங்கூரம் Nambikkai Nangooram - நம்பிக்கை நங்கூரம் Reviewed by Christking on November 27, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.