Um Sammugam - உம் சமூகம் : Album - Belan 5
Song: | Um Sammugam |
Album: | Belan 5 |
Lyrics, Tune & Sung by: | John & Vasanthy |
Music: | Gem Gabriel |
உம் சமூகம் பேரின்பமே
உம் நினைவோ ஆனந்தமே
உம் வார்த்தைகள் அதிமதுரமே
வந்தேன் தந்தேன் எனையே - (2)
1) துன்ப வனாந்திர யாத்திரையாயினும்
இன்பராம் இயேசுவில் சாய்ந்து நான் நடப்பேன்
வறண்ட கானக பாதைகள் எல்லாம்
வயல்வெளியாய் மாறியே போகும் - (2) - உம் சமூகம்
2) அலைகடல் தன்னில் அமிழ்ந்திட மாட்டேன்
அக்கினி பாதையில் அவிந்திட மாட்டேன்
அற்புதர் இயேசு என்னுடன் இருக்க
முன்சென்று எந்தன் பாதைகள் வகுக்க - (2) - உம் சமூகம்
3) செங்கடல் கண்டு கலங்கிட மாட்டேன்
எரிகோவின் மதிலால் சோர்ந்திட மாட்டேன்
மோசேயின் தேவன் என்னுடன் வருவார்
தடைகளை உடைத்து பாதைகள் தருவார் - (2) - உம் சமூகம்
Um Sammugam - உம் சமூகம் : Album - Belan 5
Reviewed by Christking
on
October 15, 2018
Rating:
No comments: