Nitham Nitham - நித்தம் நித்தம் Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Nitham Nitham - நித்தம் நித்தம் Song From Album : Belan Vol 5

    Song: Nitham Nitham
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    நித்தம் நித்தம் உந்தன் பாடல் பாட வேண்டும்
    புத்தம் புது வார்த்தை என்னில் பெருக வேண்டும்
    உம்மைப் போல யாரும் இல்லை
    பாரில் எங்கும் காணவில்லை - (2)
    பெரியவர் என்றென்றும் வல்லவர்
    நல்லவர் நீர் என்றும் என்னவர் - (2)

    1) நட்சத்திரங்கள் கையில் ஏந்தி
    குத்துவிளக்குகள் நடுவில் உலாவும் தேவனே - எங்கள் ராஜாவே
    மார்பருகே பொற்கச்சை கட்டி
    முகமே வல்லமை சூரியனாக உள்ளவரே - (2) - நித்தம்

    2) கண்கள் அக்கினி ஜுவாலையாக
    பாதம் உலைகள வெண்கலமாக இருப்பவரே - எங்கள் ராஜவே
    சத்தம் பெருவெள்ள இரைச்சல் போல
    வாயில் கருக்குள்ள பட்டயத்தோடு உள்ளவரே - (2) - நித்தம்

    3) மரித்தும் உயிர்த்தும் சதாகாலமும்
    உயிரோடு இருந்து ஆளுகை செய்யும் தேவனே - எங்கள் ராஜவே
    மரணம் படுபாதாளம் வென்று
    கையில் உரிய திறவுகோலை உள்ளவரே - (2) - நித்தம்


    Nitham Nitham - நித்தம் நித்தம் Song From Album : Belan Vol 5 Nitham Nitham - நித்தம் நித்தம் Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.