Jeeva Nathiyae - ஜீவ ஜீவ நதியே :- Samuel Sudhakar - Christking - Lyrics

Jeeva Nathiyae - ஜீவ ஜீவ நதியே :- Samuel Sudhakar


ஜீவ ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
பாத்திரமாய் மாற்றியே என்னை நிரப்புமே - 2

ஜீவ நதியே எனக்குள்ளே பாயுமே
அதிசயமாய் ஓர் அனலை ஊற்றுமே - ஜீவ ஜீவ

1) நீரோடை அருகில் மரத்தைப் போல என்னை மாற்றினீரே
ஜீவ தண்ணீரால் என்னை நிரப்பி கனி தர செய்தீரே
கேதுரு மரத்தைப் போல என்னை உயர்த்தி வைத்தீரே
ஒலிவ மரத்தைப் போல என்னை செழிப்பாய் மாற்றினீரே - ஜீவ நதியே

2) பாவியான என்னைக் கூட தேடி வந்தீரே
பாவ சேற்றில் இருந்த என்னை தூக்கி எடுத்தீரே
தாகத்தோடு வந்தபோது தாகம் தீர்த்தீரே
ஜீவ தண்ணீரால் என்னையும் நிரப்பி வைத்தீரே - ஜீவ நதியே

3) உலகம் என்னை வெறுத்தபோது என்னை தாங்கினீரே
குறைகள் என்னில் இருந்தபோதும் கிருபை தந்தீரே
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை நடத்திச் சென்றீரே
மகனே என்று உந்தன் தோளில் என்னை சுமந்தீரே - ஜீவ நதியே


Jeeva Nathiyae - ஜீவ ஜீவ நதியே :- Samuel Sudhakar Jeeva Nathiyae - ஜீவ ஜீவ நதியே :- Samuel Sudhakar Reviewed by Christking on December 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.