Jeba Geetham :- Ps Sammy Thangiah | Ps John Jebaraj

    Jeba Geetham :- Ps Sammy Thangiah | Ps John Jebaraj


    இயேசுவே வாழ்வென்று கற்றுக் கொண்டேன்
    அவரால் அத்தனையும் பெற்றுக் கொண்டேன் - 2
    என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
    என் விசுவாசம் என்றுமே தோற்கல - 2

    நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
    தடையெல்லாம் விடையாக மாறிப் போகும்
    அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
    பரலோகம் எனக்காக வேலை செய்யும் - 2

    1) உன் முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
    என்னை பெலவானாய் காண்கிறேன் - 2
    என் நேரத்தை முதலீடு செய்கிறேன்
    மகிமையை அறுவடை செய்கிறேன் - 2 - நான்

    2) துதியும் ஜெபமும் பெருகப் பெருக
    எங்கள் சபையும் பெருகுதே - 2
    தேசத்தின் கட்டுகள் மாறுதே
    அபிஷேகம் நுகங்களை முறிக்குதே - 2 - நான்

    3) அந்நிய பாஷை பேசப் பேச
    ஆவியும் அனலாய் மாறுதே - 2
    நான் சொல்லப் பரலோகில் கட்டுமே
    நான் சொல்லப் பரலோகில் அவிழுமே - 2 - நான்


    Jeba Geetham :- Ps Sammy Thangiah | Ps John Jebaraj Jeba Geetham :- Ps Sammy Thangiah | Ps John Jebaraj Reviewed by Christking on December 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.