Vallamai Gnanam - வல்லமை ஞானம் :- Rev. Vijay Aaron
Song: | Vallamai Gnanam |
Album: | Power Lines Songs V 5 |
Lyrics & Tune: | Rev. Vijay Aaron Elangovan |
Music: | Ben Jacob |
Sung by: | Rev. Vijay Aaron Elangovan & Sherina Vijay |
- Tamil Lyrics
- English Lyrics
வல்லமை ஞானம் நீதியும் நிறைந்த
வாழ வைக்கும் வள்ளலே ஸ்தோத்திரம்-2
வந்தேன் தந்தேன் உம் கரங்களில் கொடுத்தேன்
அருள் மாரி நீர் பொழிந்தெம்மை காத்தீர்-2
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே-2
1.கல்லான என் உள்ளம் அதை
உடைத்திட்ட நேசம் அது
கனிவான தம் அழைப்பிதழால்
அழைத்திட்ட நேசம் அது-2
உலகிலே காணாத நேசம்
என் உன்னதர் அணைப்பிலே கண்டேன்
இதுவரை அறியாத வாழ்வை
என் பரமனின் பாதத்தில் கண்டேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே
2.காணாமல் நான் அலைந்திருந்தேன்
தேடிடும் நேசம் கண்டேன்
கண் திறந்து கண்ணீர் துடைத்த
நாதனின் நேசம் கண்டேன்-2
தரணியில் உணராத மகிழ்ச்சி
தூய தேவனின் ஆவியில் உணர்ந்தேன்
நீதியின் வாழ்வெமக்களித்த
நீதி தேவனின் நீதியை அறிந்தேன்
உம் கிருபை மேலானதே
உம் கிருபை மாறாததே-வல்லமை ஞானம்
English
Vallamai Gnanam - வல்லமை ஞானம் :- Rev. Vijay Aaron
Reviewed by Christking
on
March 05, 2020
Rating:
No comments: