நல்ல மனுஷன்! | A Good Man! - Christking - Lyrics

நல்ல மனுஷன்! | A Good Man!



"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக் காட்டுகிறான்" (மத். 12:35).

நல்ல மனுஷனிடத்தில் நல்ல பொக்கிஷமும், பொல்லாத மனுஷனிடத்தில் பொல்லாத பொக்கிஷமுமிருக்கிறது. இதை அவர்கள் தங்கள் இருதயங்களிலேதான் வைத்திருக்கிறார்கள். பொக்கிஷம் என்பது, விலையேறப் பெற்றது. அது பாதுகாக்கப்பட வேண்டியது. அந்த நல்ல பொக்கிஷமும், பொல்லாத பொக்கிஷமும் மனிதனுடைய சிந்தையில், எண்ணங்களில், செயல்களில், அனுபவங்களின் மூலமாக இருதயத்திற்குள் போகிறது.

நல்ல மனுஷனோ நன்மையானவைகளை ஏற்றுக்கொண்டு, தீமையானவைகளை விலக்குகிறான். பொல்லாத மனுஷனோ நன்மையானவைகளை விலக்கி, தீமையானவைகளை இருதயத்தில் நிரப்புகிறான். பரலோகம் முழுவதும் நல்ல மனிதரால் நிரம்பியிருக்கிறது. ஆகவேதான், அது "பரலோக ராஜ்யம்" என்று அழைக்கப்படுகிறது. நல்லவர்கள் கர்த்தருடைய இரத்தத்தினால் பரிசுத்தவான்களாகிறார்கள். அவர்கள் அங்கே மறுரூபமாக்கப்பட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு வீடு, எந்த ஒரு அலுவலகம், எந்த ஒரு ஊர், எந்த ஒரு தேசம் நல்லவர்களால் நிறைந்திருக்கிறதோ அது பாக்கியமானது.

அரசாங்கம் ஒருவரை வேலையில் அமர்த்தும்போது, நன்னடத்தை சான்றிதழ் கொண்டுவரச் சொல்லுகிறார்கள். இவரை எனக்கு தெரியும். இவருடைய நடத்தை நல்ல நடத்தை என்று பெரிய அதிகாரிகள், சான்றிதழ் கொடுக்கிறார்கள். நீங்கள் நல்லவர்களாயிருக்க வேண்டுமென்றால், உங்கள் இருதயம் நல்லவரான கிறிஸ்துவால் நிரம்பியிருக்க வேண்டும். அவரே உங்களை நல்லவன் என்று நற்சாட்சி கொடுக்கவேண்டும். இதற்கு, நல்ல பொக்கிஷமாகிய கிறிஸ்து, நல்ல பொக்கிஷமாகிய தேவ வசனங்கள் உங்களுக்குள்ளே வாசம் செய்ய வேண்டும்.

ஒருமுறை ஒரு தேவ ஊழியர் மேடைக்கு வரும்போது மிகவும் உற்சாகமாகவும், மிகப் பிரகாசமாகவும் காணப்பட்டார். அவருடைய முகத்தில் தெய்வீக ஒளி வீசிக் கொண்டிருந்தது. அவர் சொன்னார்: "நான் நீதியின் சூரியனை விழுங்கிவிட்டு வந்திருக்கிறேன். நீதியின் சூரியனாகிய கர்த்தர் எனக்குள்ளே வாசம் செய்கிறார். காலை ஜெப நேரத்திலெல்லாம் அவருடைய பொன் முகத்தைப் பார்த்து, வேத வசனங்களை நான் தியானித்துக் கொண்டிருந்தபடியினால் அவர் எனக்குள்ளே இறங்கியிருக்கிறார். இப்பொழுது அவர் எனக்குள்ளிருந்து உங்களிடத்தில் பேசுவார்" என்றார்.

தேவபிள்ளைகளே, நீங்கள் பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளும்போது, அவரை நல்ல பொக்கிஷமாக உங்களுக்குள்ளே ஏற்றுக் கொள்ளுகிறீர்கள். நல்ல பொக்கிஷமாகிய ஆவியானவர் உங்கள் இருதயத்திற்குள்ளே வாசம் செய்கிறபடியினால் நீங்கள் என்ன பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்று கவலைப்பட வேண்டியதில்லை. ஆவியானவர் தாமே உங்களுக்குள்ளிருந்து பேசுவார் (மத். 10:19,20).

நினைவிற்கு:- "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களைக் உங்களுக்கு அறிவிப்பார்" (யோவான் 16:13).


“A good man out of the good treasure of his heart brings forth good things and an evil man out of the evil treasure brings forth evil things” (Mathew 12:35).

The good man possesses a good treasure and the wicked man possesses the evil treasure. Both of them keep it in their hearts. Treasure is a precious one and it has to be preserved. Both the good and the evil treasures get into the heart of man through his thoughts, deeds and experiences.

The good man accepts the good things and keeps the evil things away. But the wicked man fills his heart with the evil things and rejects the good things. Heaven is filled with good people and that is why it is called the Heavenly Kingdom. The good people are made saints through the blood of God. They are shining there after getting transformed. Whichever home or office or a town or a nation filled with good people is a blessed one.

As and when a person is appointed, the Government demands the candidate to produce a conduct certificate. Superior officers issue conduct certificates to their subordinates stating that the conduct of the candidate is good enough. If you want to be good, your heart should be filled with good Christ. He has to certify you as good. Christ and the Scripture which are good treasures, should dwell in you.

Once, a servant of God looked bright and energetic, when he came to the stage. Divine light was shining in his face. He said, "I have come here after swallowing the sun of righteousness. God who is the sun of righteousness is dwelling in me. He has descended on me as I was meditating the Scripture looking at His golden face in the morning. Now, He will speak to you from within me."

Dear children of God, you accept the Holy Spirit as the good treasure when you receive Him. You need not worry about what to speak and how to speak as the Holy Spirit who is the good treasure dwells in your heart. The Holy Spirit will speak from within you (Mathew 10:19, 20).

To meditate: “However, when He, the Spirit of truth, has come, He will guide you into all truth; for He will not speak on His own authority, but whatever He hears He will speak and He will tell you things to come” (John 16:13).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நல்ல மனுஷன்! | A Good Man! நல்ல மனுஷன்! | A Good Man! Reviewed by Christking on April 05, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.