நீதிமானே! | If the Righteous One! - Christking - Lyrics

நீதிமானே! | If the Righteous One!



"நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்?" (1 பேதுரு 4:18).

அப். பேதுரு 1. நீதிமான் 2. பக்தியில்லாதவன் 3. பாவி என மூன்று வகை கூட்டத்தை உங்களுடைய கண்களுக்கு முன்பாக நிறுத்துகிறார். இந்த கொடிய காலத்தில், பாவம் நிறைந்த உலகத்தில், நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், மற்றவர்களின் நிலைமை என்ன என்று அவர் கேட்கிறார்.

எரேமியா தீர்க்கதரிசி, "நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்?" (எரே. 12:5). என்று கேட்கிறார். வரப்போகிற கடைசி காலத்தை இயேசு நோவாவின் நாட்களுக்கு ஒப்பிட்டார். வேதம் சொல்லுகிறது, "எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டு போகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்" (மத். 24:38,39).

நோவாவின் நாட்களில் நூற்றிருபது வருடம் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்ட போதிலும் எட்டு பேர் மாத்திரமே பேழைக்குள் காணப்பட்டார்கள். பக்தியில்லாதவர்களும், பாவிகளும் ஜலப்பிரளயத்திலே மூழ்கி அழிந்தார்கள். ஜலப்பிரளயம் வரப்போகிறது என்று நோவா தீவிரமாக பிரசங்கித்தார். மிருக ஜீவன்களுக்கு கர்த்தர் கொடுத்த ஏவுதலினால் பறவைகளும், மிருகங்களும், ஜோடி ஜோடியாக பேழைக்குள் பிரவேசித்தன. ஆனால் மனுஷருக்கோ உள்ளே வர பிரியமில்லை.

தேவபிள்ளைகளே, இன்று நீங்கள் நீதிமான்களின் கூட்டத்தில் காணப்படுகிறீர்களா? அல்லது பக்தியில்லாதவர்களும், பாவிகளும் இருக்கிற கூட்டத்தில் காணப்படுகிறீர்களா? சிலர் நான் நீதிமான் அல்ல; அதே நேரத்தில் பாவியும் அல்ல; நான் சன்மார்க்கன் என்று சொல்லுகிறார்கள். சன்மார்க்கம் ஒருபோதும் கர்த்தருடைய கிருபையைப் பெற்றுத் தருவதில்லை.

நீதி என்றால் என்ன? பரிசுத்தமான தேவனுடைய சந்ததியிலே நிற்பதற்குரிய தகுதியே நீதியாகும். சாதாரணமாக எந்த மனுஷனும் அதற்கு தகுதியுள்ளவனல்ல. அவனுடைய நீதியெல்லாம் அழுக்கான கந்தையைப் போலிருக்கிறது. எந்த சன்மார்க்க நெறிகளும் தேவ சமுகத்தில் நிற்பதற்கு அவனை தகுதிப்படுத்துவதில்லை. ஆனால் எந்த ஒரு மனுஷன் தன்னை பாவி என்று உணர்ந்து தேவனுடைய நீதியை ஏற்றுக்கொள்ளுகிறானோ, அவனே நீதிமானாகிறான். கர்த்தர் ஒரு மனுஷனை நீதிமானாக்காமல் எவனாலும் தனது சுய பிரயாசத்தினால் நீதிமானாக முடியவே முடியாது.

தேவபிள்ளைகளே, கர்த்தருடைய வருகையின் நாளிலே நீங்கள் வந்திருக்கிறீர்கள். தேவ சமுகத்திலே நீங்கள் என்றென்றும் காணப்படும்படி கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டு இன்றைக்கே நீதிமான்களாக ஒப்புக்கொடுப்பீர்களாக.

நினைவிற்கு:- "நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5:1).


“Now “If the righteous one is scarcely saved, where will the ungodly and the sinner appear?” (I Peter 4:18).

Peter the Apostle brings before you three kinds of people and they are, righteous, ungodly and sinner. In this terrible time, in this world which is filled with sins, when even the righteous are scarcely saved, what will happen to the ungodly and the sinner is his question.

Prophet Jeremiah asks, “If you have run with the footmen, and they have wearied you, then how can you contend with horses?” (Jeremiah 12:5). Jesus Christ compared the final days of the future to the period of Noah. The Scripture says, “For as in the days before the flood, they were eating and drinking, marrying and giving in marriage, until the day that Noah entered the ark and did not know until the flood came and took them all away, so also will the coming of the Son of Man be” (Mathew 24:38, 39).

Even after 120 years of gospel preaching; only eight persons were saved in the Ark of Noah. The ungodly people and the sinners immersed in the flood. Noah had been seriously preaching that the flood would occur. Because of the inspiration God gave to the livestock, the bird and animals entered into the ark in pairs. But human beings were not willing to do that.

Dear children of God, do you find a place in the group of the righteous? Or you are a part of the group of ungodly people and the sinners? Some people say that they are neither righteous nor sinner but belong to the path of virtues. The path of virtues will never help you receive the grace of God.

What is righteousness? The eligibility to stand in the presence of the Holy God is what the righteousness is. No ordinary man is eligible for this. His righteousness wears the look of a dirty garment. No principles of the path of virtue will make him fit to stand in the presence of God. Whichever man accepts the righteousness of God after realising that he is a sinner, he becomes righteous. Unless God makes a man righteous, no one could become righteous with their own efforts.

Dear children of God, you have come to the day of His Coming. May you submit yourself to become righteous after getting washed by the blood of Jesus so that you will be found in the presence of God forever!.

To meditate: “Therefore, having been justified by faith, we have peace with God through our Lord Jesus Christ” (Romans 5:1).

Author : Pr. Joseph Osborne Jebadurai
நீதிமானே! | If the Righteous One! நீதிமானே! | If the Righteous One! Reviewed by Christking on April 26, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.